தி.மு.க. இளைஞரணி வாகன பேரணி - தாராபுரத்தில் அமைச்சர் கயல்விழி வரவேற்பு

மோட்டார் சைக்கிள் பேரணி வடதாரை வழியாக சின்னகடை வீதி, பூக்கடை கார்னர், அலங்கியம் ரவுண்டானா, உடுமலை ரவுண்டானா, புதிய பஸ் நிலையம் வழியாக அமராவதி ரவுண்டானா சென்று முடிந்தது.


திருப்பூர்: தாராபுரம் வந்த திமுக இளைஞரணி வாகன பேரணியில் வந்த திமுக தொண்டர்களை அமைச்சர் கயல்விழி சால்வை அணிவித்து வரவேற்று பழங்கள் வழங்கினார்.

சேலத்தில் நடக்கும் இளைஞரணி மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தி.மு.க. இளைஞரணியினர் மோட்டார் சைக்கிளில் பேரணியாக தாராபுரம் வந்தனர்.



அவர்களுக்கு ஐ.டி.ஐ. கார்னரில் அமைச்சர் கயல்விழி சால்வை அணிவித்து வரவேற்று பழங்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு தாராபுரம் ஒன்றிய செயலாளர் எஸ்.வி.செந்தில்குமார் மற்றும் நகர செயலாளர் எஸ்.முருகானந்தம் ஆகியோர் தலைமை தாங்கினர்.



நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் பூங்கொத்து கொடுத்தார். பிறகு மோட்டார் சைக்கிள் பேரணி வடதாரை வழியாக சின்னகடை வீதி, பூக்கடை கார்னர், அலங்கியம் ரவுண்டானா, உடுமலை ரவுண்டானா, புதிய பஸ் நிலையம் வழியாக அமராவதி ரவுண்டானா சென்று முடிந்தது.



அப்போது மாவட்ட துணை செயலாளர் பிரபாவதி பெரியசாமி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜெயக்குமார், துணை அமைப்பாளர் ஆரோன் செல்வராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சன்பாலு, நகர அவைத் தலைவர் கதிரவன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஹைடெக் அன்பழகன் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் நகர நிர்வாகிகள், இளைஞரணி, தொண்டரணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஜனவரி முதல் செப்டம்பர் வரை கோவையில் 132 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

கோவை மாநகரில் 2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 9 வரை பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக 132 பேர் மீத...

Jan to Sep: 132 Offenders Placed Under Preventive Detention in Coimbatore

A total of 132 persons involved in various criminal activities were preventively detained under the Tamil Nadu Preventio...

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...