கள்ளக்கிணறு கொலை வழக்கு - குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய காவல்துறை

மது அருந்தியதை தட்டிகேட்டவர்களை கொலை செய்த வழக்கில் 800 பக்கம் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டன. கொலை குற்றவாளிகளை நவம்பர் 22 ஆம் தேதி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ள கிணறு கொலை வழக்கு தொடர்பான குற்றவாளிகளை நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்ப்படுத்தினர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் வசித்து வந்த செந்தில்குமார்,மோகன்ராஜ், ரத்தினம்மாள் மற்றும் புஷ்பவதி ஆகியோர் தனது வீட்டின் அருகே மது அருந்திய நபர்களை தட்டிக் கேட்டதற்காக வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் போலீசார் செல்லமுத்து, ஐயப்பன், குட்டி என்கின்ற வெங்கடேஷ், சோனை முத்தையா மற்றும் செல்வம் ஆகிய ஐந்து பேரை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.



இதில் விசாரணையின் போது தப்பிக்க முயன்றதாக குட்டி என்கின்ற வெங்கடேஷ் என்பவனை போலீசார் கால் முட்டியில் சுட்டு பிடித்தனர்.

குட்டி என்கின்ற வெங்கடேஷ் கோவையில் அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்போடு சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர் 800 பக்கத்திற்கு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்நிலையில் இன்று பல்லடம் குற்றவியல் நீதிமன்றத்தில் கலக்கிணறு கொலை குற்றவாளிகள் ஐந்து பேரையும் காவல்துறையினர் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தினர். குற்றவாளிகள் ஐந்து பேரையும் வரும் நவம்பர் 22 ஆம் தேதி திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என நீதிபதி சித்ரா உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...