தகுதியானவர்களுக்கு பட்டா வழங்கக்கோரி க.க.சாவடி பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு

இலவச வீட்டுமனை பட்டாவை தகுதியானவர்களுக்கு வழங்காமல் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளதாகவும், தகுதியானவர்களுக்கு பட்டா வழங்கக்கோரியும் க.க.சாவடி பொதுமக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


 இதுகுறித்து க.க.சாவடி, காமராஜபுரம் ஊர் பொதுமக்கள் சார்பில் ந.ஆனந்தகுமார் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-


நாங்கள் எட்டிமடை பேரூராட்சிக்கு உட்பட்ட க.க.சாவடி 4-வது வார்டுக்குட்பட்ட காமராஜபுரம் பகுதியில் பல வருடங்களாக வசித்து வருகிறோம். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஆளும் கட்சியை சேர்ந்த கிணத்துக்கடவு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எ.சண்முகம் மற்றும் முன்னாள் கவுன்சிலர் லலிதா ஆகியோர் இணைந்து ஆளும் கட்சியை சேர்ந்த ஏற்கனவே அரசு இலவச வீட்டுமனை பட்டா பெற்றவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியுள்ள மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...