தீபாவளி பண்டிகையை ஒட்டி தாராபுரத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்பு

தாராபுரத்தில் தீபாவளி கூட்டத்தை 24 மணி நேரமும் கண்காணிக்கும் பணியில் போலிசார் இறங்கியுள்ளனர். காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை பாதுகாப்பு நீடிக்கும் என போலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


திருப்பூர்: தீபாவளி பண்டிகையை ஒட்டி தாராபுரத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

தீபாவளி பண்டிகை இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பொதுமக்கள் பெரும்பாலும் தீபாவளிக்கு புத்தாடைகள் தங்க நகைகள் பட்டாசுகள் இனிப்புகள் மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் வாங்க தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து தினசரி ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் பெரிய கடை வீதி ஜவுளி கடை வீதி பொள்ளாச்சி ரோடு சின்ன கடை வீதி ஆகிய பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகள் நகைக்கடைகள் மற்றும் மளிகை கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இந்த கூட்டத்தை தவிர்க்கவும் சீரான போக்குவரத்தை ஏற்படுத்த நகரின் மையப் பகுதியான பூக்கடைக்காரனில் தாராபுரம் கோட்ட போலீஸ் துணை சூப்பர் கலையரசன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன் குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர்கள் பரமசிவம் விஜயகுமார் ஆகியோர் மேற்பார்வையில் சவுக்கு கட்டைகள் பலகைகளால் சாரம் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இப்பகுதியில் 24 மணி நேரமும் 50க்கும் மேற்பட்ட போலீசாருடன் போக்குவரத்தை பொதுமக்கள் நடமாட்டத்தையும் தீவிரமாக கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலை 6 மணிக்கு தொடங்கும் கண்காணிப்பு பணி இரவு 11 மணி வரை நீடிக்கிறது போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து போலீசார் கோர்வையில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடக்காமல் இருக்க பொதுமக்கள் தங்கள் பணம் மற்றும் நகைகள் செல்போன்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...