தாராபுரத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து நகராட்சி தலைவர் ஆய்வு

மழை நீர் வடிகால் அமைத்தல், நகராட்சி பகுதியில் பழுதடைந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணறுகள் மற்றும் சின்டெக்ஸ் தொட்டிகள் ஆகியவற்றை பழுது நீக்குதல் உள்ளிட்ட பணிகளை நகராட்சி தலைவர் பாபு கண்ணன் ஆய்வு செய்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி பகுதியில் 19 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அடிப்படை பணிகளான சாக்கடைகள் பராமரிப்பு, குடிநீர் தொட்டிகள் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை நகராட்சி தலைவர் பாபு கண்ணன் ஆய்வு செய்தார்.



இதனை தொடர்ந்து சீதா நகர் சர்ச் ரோடு ஆகிய பகுதிகளில் மழை நீர் வடிகால் அமைத்தல் மற்றும் போலீஸ் நிலைய வீதி ஆகிய பகுதிகளில் மழை நீர் வடிகால் புதிதாக அமைத்தல் நகராட்சி பகுதியில் பழுதடைந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணறுகள் மற்றும் சின்டெக்ஸ் தொட்டிகள் ஆகியவற்றை பழுது நீக்குதல் செய்யப்பட பணிகளையும் ஆய்வு செய்தார்.



இதனை தொடர்ந்து 26, 27 ஆகிய பகுதிகளில் சமுதாய கழிப்பிடமும் பராமரிப்பு பணிகள் மற்றும் மழைநீர் வடிகால், சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.



இதில் திமுக நகரச் செயலாளர் முருகானந்தம், தாராபுரம் நகராட்சி பொறியாளர் சண்முகவடிவு, நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் சுகாதார அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் செல்வகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...