குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்த பொதுமக்கள் - குறைகளை தீர்ப்பதாக கோவை மேயர் உறுதி

பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் மேயர் கல்பனா ஆனந்தகுமாரிடம் பொதுமக்கள் அளித்தனர்.


கோவை: பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அலுவலர்களுக்கு மேயர்கல்பனா ஆனந்தகுமார்உத்தரவிட்டுள்ளார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் துணை ஆணையாளர்கள் சிவகுமார், செல்வசுரபி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.



இக்கூட்டத்தில் மாண்புமிகு மேயர் அவர்களிடம் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நபர்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டன.



இவற்றில் கிழக்கு மண்டலத்தில் 10 மனுக்களும், மேற்கு மண்டலத்தில் 11 மனுக்களும், வடக்கு மண்டலத்தில் 8 மனுக்களும், தெற்கு மண்டலத்தில் மனுக்களும், மத்திய மண்டலத்தில் 13 மனுக்களும், பிரதான அலுவலகத்தில் 3 மனுவும், ஆகமொத்தம் 47 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இக்கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டமேயர் கல்பனா ஆனந்தகுமார், இம்மனுக்களின் மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

இக்கூட்டத்தில், மாநகரப்பொறியாளர் முருகேசன், உதவி ஆணையர் (வருவாய்) (பொ).தமிழ்வேந்தன், உதவி ஆணையர் (நிர்வாகம் (பொ) மாணிக்கம், மண்டல உதவி ஆணையர்கள் சந்தியா, ஸ்ரீதேவி, ஜே.பிரேம்ஆனந்த், மகேஷ்கனகராஜ், செந்தில்குமரன், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி நகரமைப்பு அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

Newsletter

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 10ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

Stringent Action for Licence Violations, Coimbatore SP Warns FL-2, FL-3 Bar Owners

At a consultative meeting with owners and management representatives of FL-2 and FL-3 bars, Coimbatore District Superint...