குறிச்சி அரவான் திருவிழா நடத்துவதற்கு தடை - உரிய நடவடிக்கை கோரி ஒருங்கிணைப்புக்குழு மனு

கோவை குறிச்சி பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் அரவான் திருவிழாவிற்கு தடையாக உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் ஒருங்கிணைப்புக்குழு மனு அளித்துள்ளது.


கோவை: குறிச்சி அரவான்திருவிழா நடத்திட நிர்வாக ரீதியாகவும் சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை எழுந்துள்ளது.

கோவை குறிச்சி பகுதியில் ஆண்டுதோறும்அரவான் திருவிழா நடைபெற்று வருகிறது. பல வருடங்களாக 16 சமுதாய மக்கள் ஒன்றிணைந்து இந்த அரவான் திருவிழாவை நடத்தி வருகின்றனர்.



இந்நிலையில் இந்தத் திருவிழாவை நடத்த வேண்டிய நிர்வாகிகளில் ஒரு சிலர் தடையாக இருப்பதாகவும் அவர்களிடம் விசாரணை நடத்திட வேண்டியும் குறிச்சி அரவான் ஒருங்கிணைப்பு குழுவினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இது குறித்த அவர்கள் அளித்துள்ள மனுவில், இந்த திருவிழா நடத்துவதற்கு கூட்டத்தை அறிவிக்க வேண்டிய ஊர் கவுண்டர் பத்மகுமார் அவர் சொல்லும் படியாக மற்ற சமூகத்தினர்கேட்டால் மட்டுமே தேதியை அறிவிப்பேன் எனக் கூறுவதாகவும் கணக்குப் பிழையான மரகதம் பிள்ளை தனது வீட்டிற்கு வந்தால் மட்டுமே நான் கலந்து கொள்வேன் என்கிறார் என குறிப்பிட்டுள்ளனர். மேலும் தேவர் சமூகத்தில் மூன்று பேர் நாங்கள் தான் தேவர் சமூகப் பிரதிநிதி(முக்கந்தர்) என்கின்றனர் என குறிப்பிட்டுள்ள அவர்கள் இந்த நபர்களால் அவர்கள் சார்ந்த சமூகத்தினர் திருவிழா நடக்க வேண்டும் என்று நினைத்தாலும் இவர்கள் தடையாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.



எனவே திருவிழாவிற்கு தடையாக உள்ள இவர்களை முறையாக விசாரித்து திருவிழா நடத்திட நிர்வாக ரீதியாகவும் சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 10ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

Stringent Action for Licence Violations, Coimbatore SP Warns FL-2, FL-3 Bar Owners

At a consultative meeting with owners and management representatives of FL-2 and FL-3 bars, Coimbatore District Superint...