கோவையில் புதிதாக திறக்கப்பட்ட மதுபானக்கடை - மாமன்ற உறுப்பினர் தலைமையில் சாலைமறியல்

அரசின் கவனத்திற்க்கு கொண்டு சென்று கடை அகற்றப்படும் என காவல்துறை அளித்த உறுதியின் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.


கோவை: கோவையில் பகுதியில் புதிதாக மதுபானக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

கோவை P.N.புதூர் பகுதியில் புதிதாக திறந்த மதுபானக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து 41-வது மாமன்ற உறுப்பினர் K.சாந்தி சந்திரன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.



கடந்த வருடமே மருதமலை மெயின் ரோடு P.N.புதூர் மயானத்தின் பின்புறம் மதுபானக்கடை வருவதை அறிந்த பொதுமக்கள் மாமன்ற உறுப்பினரை அணுகியதால் போராட்டம் நடைபெறும் நேரத்தில் காவல்துறை முன்னிலையில் இட உரிமையாளர் கடை வராது என உறுதிமொழி கொடுத்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.



ஆனால் இந்த வருடம் (2023) ஆகஸ்ட் மாதம் மீண்டும் கடை திறக்கும் வேலைகள் நடைபெறும் பொழுதில் இருந்து தொடர்ச்சியாக மாவட்ட கலெக்டர் உள்ளிட்டு அனைத்து அதிகாரிகளையும் தொடர்ச்சியாக நேரில் சந்தித்து புகார் மனுவாக கொடுத்தும், அதிகாரிகளும் கடை வராமல் பார்த்துக் கொள்கிறோம் என கூறிய நிலையில் இன்று மதியம் திடிரென காவல்துறையை குவித்து கடையை திறந்து விட்டதை அறிந்த பொதுமக்கள் ஒன்றுகூடி எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் வந்து மாவட்ட ஆட்சியர், டாஸ்மார்க் அதிகாரிகளிடம் தங்களது எதிர்ப்பை தெரிவித்து, அரசின் கவனத்திற்க்கு கொண்டு சென்று தங்களது குறைகளை தீர்த்து வைப்பதாக உறுதியின் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...