வ.உ.சி பூங்காவை இடமாற்றம் செய்யக்கூடாது - அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கோவையில் கோரிக்கை

மைசூர் உயிரியல் பூங்காவை விட கோவையில் உள்ள வ.உ.சி உயிரியல் பூங்காவை பெரியதாக உருவாக்க திட்டமிட்டு இருந்ததாகவும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் திமுக புதிய திட்டங்கள் தராவிட்டாலும் பரவாயில்லை ஆனால் இருக்கின்ற திட்டங்களுக்கு மூடு விழா செய்கிறார்கள் என வேலுமணி புகார் தெரிவித்தார்.


கோவை: கோவை மக்களின் கோரிக்கைக்கு இணங்க இந்த பூங்கா இடமாற்றத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.



தீபாவளி பண்டிகையையொட்டி அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு அதிமுக கோவை மாவட்ட தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கைக்கடிகாரங்களை பரிசாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் கமலக்கண்ணன் சட்டமன்ற உறுப்பினர்கள் கிணத்துக்கடவு தாமோதரன், சிங்காநல்லூர் ஜெயராமன், அம்மன் அர்ஜுனன் உள்ளிட்டார் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுக்கிணங்க தமிழகம் முழுவதும் 45 ஆயிரம் தொழிலாளர்களுக்கு கைக்கடிகாரம் வழங்கப்பட்டதாகவும் கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 2500 தொழிலாளர்களுக்கு இன்று கைக்கடிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பாக இருக்கக்கூடிய ஒரே இயக்கம் அதிமுக தான் என்றும் தொழிலாளர்களின் ஒரே பாதுகாவலர் எடப்பாடியார் தான் என்றும் குறிப்பிட்டார்.

கோவையில் 60 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட உயிரியல் பூங்காக்களில் இருந்த உயிரினங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தான் அமைச்சராக இருந்த பொழுது இந்த உயிரியல் பூங்காவை விரிவு படுத்தி என்றும் குற்றம் சாட்டினார். கோவை மக்களுக்கு இருந்த ஒரே பொழுதுபோக்கு உயிரியல் பூங்கா தான் எனவும் புறநகர் பகுதியான எட்டிமடை பகுதியில் ஒரு உயிரியல் பூங்கா அமைக்க சூழல் இருந்த போதும் அதை வேண்டாம் என்று மாநகருக்குள்ளேயே அமைக்க முடிவு செய்ததாகவும் தற்போது இடமாற்றம் செய்யும் முடிவை உடனடியாக நிறுத்தி இந்த பூங்காவை விரிவு படுத்தி பெரிய பூங்காவாக செயல்படுத்த வேண்டும் எனவும் கூறியதுடன் இல்லாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் எனவும் கோவை மக்களின் கோரிக்கைக்கு இணங்க இந்த பூங்கா இடமாற்றத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார். தற்போதைய முதலமைச்சர் எதிர் கட்சியாக இருக்கும் பொழுது அனைத்து பகுதிகளுக்கும் ஒரு பெட்டியை கொண்டு வந்து யார் வேண்டுமானாலும் தன்னை சந்திக்கலாம் என்று கூறினார்.

ஆனால் தற்போது தொழில் அமைப்பினர், தொழிற்சங்கங்கள் உள்ளிட்டோர் பல கோரிக்கைகளை வைத்தாலும் அதனை அமைச்சர்களும் கேட்பதில்லை முதலமைச்சரை சந்திக்கவும் முடியவில்லை என்றும் வருகிற திங்கட்கிழமை கோவை தொழிற்சங்கங்களின் கோரிக்கை மனுவை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களாகிய தாங்கள் நேரில் சென்று பெற உள்ளதாகவும் தெரிவித்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...