கோவையில் உள்ள மழைநீர் வடிகால்கள் - மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு

எம்.எஸ்.அவென்யூ, குறிச்சி பிரிவு, போத்தனூர் பிரதான சாலை, உமர் நகர் மற்றும் LLYODS அவென்யூ ஆகிய பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அப்பகுதிகளிலுள்ள மழைநீர் வடிகால் தூர்வாரவும், சேதமடைந்த சாலையை சரிசெய்யவும், பழுதடைந்த தெரு விளக்குகளை சரிசெய்யவும் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைநீர் வடிகால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வாரிட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.



கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.95க்குட்பட்ட எம்.எஸ்.அவென்யூ, குறிச்சி பிரிவு, போத்தனூர் பிரதான சாலை, உமர் நகர் மற்றும் LLYODS அவென்யூ ஆகிய பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அப்பகுதிகளிலுள்ள மழைநீர் வடிகால் தூர்வாரவும், சேதமடைந்த சாலையை சரிசெய்யவும், பழுதடைந்த தெரு விளக்குகளை சரிசெய்யவும் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.



அதனைத் தொடர்ந்து, வார்டு எண்.95க்குட்பட்ட போத்தனூர் பிரதான சாலையினை நேரில் சென்று பார்வையிட்டு அப்பகுதியில் பாலம் அமைத்து, சாலையை சரிசெய்யவும், மழைநீர் வடிகால் தூர்வாரிடவும் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்ட பின்பு,



வார்டு எண்.96க்குட்பட்ட சுந்தராபுரம், மதுக்கரை பிரதான சாலையில் உள்ள சிறுபாலத்தை சரிசெய்ய சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்.



பின்னர், தெற்கு மண்டலம் வார்டு எண்.97க்குட்பட்ட பிள்ளையார்புரம் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் தூர்வார உரிய திட்டமதிப்பீடு தயாரித்திடவும், அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, அடிப்படை வசதிகளை உடனடியாக செய்துதரவும், ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்ட பின்பு,



பிள்ளையார்புரம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நேரில் சென்று பார்வையிட்டு, அங்கன்வாடி மையத்தில் உள்ள பதிவேடுகள், உணவு பொருட்களின் இருப்புகள் குறித்து கேட்டறிந்தார்.



அதனைத் தொடர்ந்து, வார்டு எண்.92க்குட்பட்ட பாலக்காடு பிரதான சாலை, கோவைப்புதூர் பிரிவு ஆகிய பகுதிகளில் பார்வையிட்டு, அப்பகுதியில் மழைநீர் வடிகால்கள் அமைக்க உரிய திட்டமதிப்பீடு தயாரிக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்ட பின்னர்,



குனியமுத்தூர், செங்குளம் பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றுவது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.ச.செல்வசுரபி, ஆளுங்கட்சித்தலைவர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் குணசேகரன், அஸ்லாம் பாஷா, அப்துல் காதர், இளஞ்சேகரன், உதவி ஆணையர் பிரேம் ஆனந்த், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி, மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பசும்பொன். மாநகராட்சி உதவி பொறியாளர்கள் சபரிராஜ். சதீஸ்குமார், சரண்யா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...