தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் மற்றும் இன்னோவேஷன் - கோவையில் அரசு அலுவலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு

அரசு அலுவலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பில் புத்தொழில் குறித்த விழிப்புணர்வினையும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும் அரசு அதிகாரிகளுக்கு விளக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் மற்றும் இன்னோவேஷன் சார்பில் புத்தொழில் சூழமைவு தொடர்பான அரசு அலுவலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் புத்தொழில்களுக்கு உந்து சக்தியாகவும், வேலைவாய்ப்பு பொருளாதார வளர்ச்சிக்கான தொடக்க மற்றும் சூழலை கட்டமைப்பதற்கும், புத்தாக்கத்தால் தமிழ்நாட்டில் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தவும். தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் செயல்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் புத்தொழில் முனைவோர்களுக்கு தங்கள் நிறுவனத்தின் ஆரம்ப நிலைகளை சிறப்பாக வடிவமைக்க, மானிய உதவியாக ரூ.10இலட்சம் வரை கடனுதவிகள் வழங்கப்படுகிறது. பெண் தொழில்முனைவோர்களுக்கு ரூ.15இலட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. மாநிலத்தை கண்டுபிடிப்பு மையமாக மாற்ற ஸ்டார்ட் அப்கள், தொழில்முனைவோர் கண்டுபிடிப்பாளர்கள்.



இன்குபேட்டர்கள், முதலீட்டாளர்கள், தொழில் அமைப்புகள் வழிகாட்டிகள் அரசு நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களுடன் இணைத்து செயல்படுத்தப்படுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள வளங்களை பயன்படுத்தி அரசின் வளர்ச்சியை மேம்படுத்தமுடியும். தனித்தனியாக ஒவ்வொரு அரசுத் துறைகளும் செயல்பட்டாலும், அவை அனைத்தும் ஒருங்கிணைத்து திட்டங்களை செயல்படுத்தும் போது அதன் செயல்பாடு சிறப்பாக அமையும். ஒவ்வொரு அரசு துறைகளும் மற்ற துறைகளில் இருக்கும் செயல்பாடுக்களையும் வாய்ப்புகளையும் அறிந்து இணைத்து செயலாற்றும் போது பயனீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

கோவை மாவட்டம் இந்தியளவில் சிறந்த புத்தொழில் மையம் என்னும் சிறப்பு வாய்ந்தது. எண்ணிலடங்கா வாய்ப்புகள் வழங்கிடும் நகரமாக திகழ்கிறது. இந்த சூழ்நிலையினை பயன்படுத்தி புத்தொழில் உருவாகும் சூழலை அரசு அதிகாரிகள் வழங்கிட வேண்டும் என்றார். இப்பயிற்சிக் கூட்டத்தில் புத்தொழில் குறித்த விழிப்புணர்வினையும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும் அரசு அதிகாரிகளுக்கு விளக்கப்பட்டது. அரசு துறைகளில் நிலவிவரும் சவாலான பிரச்சனைகளுக்கு புத்தாக்க சிந்தனைகளுடன் செயல்படும் புத்தொழில் நிறுவனங்கள் மூலம் தீர்வு காணும் வாய்ப்பினை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதில் கூட்டுறவு, சமூக நலம், நெடுஞ்சாலை, வேளாண்மை, தோட்டக்கலை, மின்சாரம், மருத்துவம், மீன் வளம், தாட்கோ உள்ளிட்ட இருபதிற்கும் மேற்பட்ட துறைகளில் இருந்து அரசு அலுவலர்கள் இப்பயிற்சியில் கலந்துகொண்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...