மூலனூரில் நிதி நிறுவன அதிபர் வீட்டில் கொள்ளை முயற்சி - ஒடிசா மாநில தொழிலாளர்கள் 4 பேர் கைது

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 4 தொழிலாளர்களும், நிதி நிறுவன அதிபர் செல்வராஜ் தூங்கிய பிறகு அவரது ஒரு வீட்டிற்கு தாழ்பாள் இட்டு மற்றொரு வீட்டில் வைத்திருந்த நகை, பணத்தை கொள்ளை அடிக்க சென்றதாகவும், ஆனால் அங்கு எதிர்பார்த்தபடி பணம், நகை எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதாகவும் போலீசாரிடம் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள மூலனூர் விநாயகா நகர் பகுதியில் வசித்துவரும் நிதி நிறுவன அதிபர் செல்வராஜ், இவர் தனக்கு சொந்தமாக இரண்டு வீடுகளை வைத்துள்ளார்.

அதில் ஒரு வீட்டின் பகுதி முழுவதும் புட்கள் முளைத்து புதர் மண்டி கிடந்தது. இதற்காக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணா(23,)உத்தாமேதர் (31)சோனியா நாயக்(20) குனாபெஹாரா(26) ஆகிய நான்கு பேரை அழைத்து வந்து நேற்று பகலில் வீட்டை சுத்தம் செய்யும் பணியினை கொடுத்துள்ளார். பணி முடிந்ததும் அவர்களை அங்கிருந்து மாலை அனுப்பி வைத்துவிட்டார். இந்த நிலையில் செல்வராஜ் தனது மற்றொரு வீட்டிற்கு சென்று அங்கு இரவு தூங்கிக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் மறுநாள் காலை இன்று எழுந்ததும் கதவை திறந்தபோது கதவு திறக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் தனது நண்பருக்கு அலைபேசி மூலம் தகவல் தெரிவித்து தனது வீட்டிற்கு வரவழைத்து பார்த்த போது செல்வராஜ் தூங்கிக் கொண்டிருந்த வீட்டின் கதவு முன் பக்கத்தில் பூட்டு போடப்பட்டிருந்தது. அதன் பிறகு நண்பர் தாழ்பாலை திறந்து விட்டு வெளியே வந்து சுற்று முற்றும் பார்த்தனர். ஆனால் சந்தேகப்படும்படியான எந்த ஒரு சம்பவமும் தெரியவில்லை.

அதன் பிறகு அருகில் இருந்த மற்றொரு தனது வீட்டைச் சென்று பார்த்தபோது அந்த வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் மீண்டும் அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைத்திருந்த பீரோ உடைக்கப்பட்டு துணிகள் அவர் வைத்திருந்த ஆவணங்கள் கலைந்த நிலையில் கிடந்தது இதனால் சந்தேகம் அடைந்த செல்வராஜ் மூலனூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் சண்முகம் சந்தேகப்படும்படியான நபர்கள் யாராவது உங்கள் வீட்டிற்கு நேற்று வந்தார்களா என செல்வராஜ் இடம் விசாரித்தார். அப்போது ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த நான்கு கூலி தொழிலாளர்கள் நேற்று வீட்டை சுத்தம் செய்ய வந்ததாக தெரிவித்தார். அவர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர்.



விசாரணையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 4 பேரும் செல்வராஜ் தூங்கிய பிறகு அவரது ஒரு வீட்டிற்கு தாழ்பாள் இட்டு மற்றொரு வீட்டில் வைத்திருந்த நகை பணம் கொள்ளை அடிக்க சென்றதாகவும், ஆனால் அங்கு அவர்கள் எதிர்பார்த்தபடி பணம் நகை எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதாகவும் ஒப்புக்கொண்டனர்.

அதன் பிறகு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர்கள் மீது மூலனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். ஒரிசா மாநில தொழிலாளர்கள் பகலில் கூலி தொழிலாளர்கள் ஆகவும் இரவில் கொள்ளைக்காரர் ஆகவும் இருந்து வந்தது மூலனூர் பகுதி மக்களிடத்தில் பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...