கோவையில் திமுக வர்த்தகர் அணி நிர்வாகிகளின் அறிமுக ஆலோசனைக் கூட்டம்

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது குறித்தும், கட்சியின் ஆக்க பணிகள் குறித்தும் கோவையில் நடைபெறும் திமுக வர்த்தகர் அணி நிர்வாகிகளின் அறிமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.


கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் மற்றும் அண்ணாவின் சிலைக்கு கோவை மாநகர் மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் மாரிசெல்வன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோவை மாநகர், வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக வர்த்தகர் அணி நிர்வாகிகளின் அறிமுக ஆலோசனைக் கூட்டம் திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. திமுக மாநில வர்த்தகர் அணியின் இணைச் செயலாளர் முருகவேல் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், கோவை மாநகர் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் மாரிசெல்வன், வடக்கு மாவட்ட அமைப்பாளர் வேலுசாமி, தெற்கு மாவட்ட அமைப்பாளர் கண்ணன், மாநகர் மாவட்ட தலைவர் சுப்பிரமணி உட்பட பலர் முன்னிலை வகிக்கின்றனர்.



இந்த ஆலோசனை கூட்டத்தின் துவக்கத்தில் திமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து சிறப்புரை ஆற்றினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோவை மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது குறித்தும், கட்சியின் ஆக்க பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.



முன்னதாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் மற்றும் அண்ணாவின் சிலைக்கு கோவை மாநகர் மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் மாரிசெல்வன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...