தேவம்பாளையம் கிராம சபை கூட்டத்தில் துணைத்தலைவருக்கு எதிர்ப்பு - தம்பதியினர் தீக்குளிக்க முயற்சி

பழங்கரை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நடராஜ் வீடு கட்டுவதற்காக, மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து தனியே குழாய் மூலம் முறைகேடாக தண்ணீர் எடுத்து வருவதாக தேவம்பாளையம் கிராம சபை கூட்டத்தில் தம்பதியினர் புகார் தெரிவித்தனர்.


திருப்பூர்: வீடு கட்டுவதற்கு முறைகேடாக தண்ணீர் எடுப்பதை தட்டிக்கேட்டதால், ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி கிராம சபை கூட்டத்தில் தம்பதியினர் தீக்குளிக்க முயன்ற நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட தேவம்பாளையம் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

பச்சாம்பாளையம் கிராமத்தில் உள்ள துவாரகா அவன்யூ பகுதியை சேர்ந்த நூல் வியாபாரி தர்மசீலன் என்பவரது வீட்டிற்கு அருகில் பழங்கரை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நடராஜ் வீடு கட்டி வருகிறார். இந்த வீடு கட்டிட வேலைக்காக பழங்கரை ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து தனியே குழாய் மூலம் முறைகேடாக தண்ணீரை எடுத்துவருவதாகவும், இதனால் ஒரு மணிநேரம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பதினைந்து நிமிடம் மட்டுமே விநியோகிக்கப்படுவதாகவும், அப்பகுதி மக்கள் சார்பாக துணைத் தலைவரிடம் கேட்டுள்ளார்.

இதனால், கோபம் அடைந்த துணைத் தலைவர், தர்மசீலனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தர்மசீலன் மற்றும் அவரது மனைவி இருவரும் இன்று நடந்த கிராம சபை கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.



கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும் போதே தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை எடுத்து, எனது குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு இல்லை என்றும் துணைத்தலைவர் கொலை மிரட்டல் விடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுங்கள், எடுக்கவில்லை என்றால் தீ குளிக்கப் போகிறேன் என கூறி தன் மீது ஊற்றிக் கொண்டார்.



உடனடியாக அருகில் இருந்த காவலர்கள் மற்றும் பொதுமக்கள் தடுத்து அவரிடம் இருந்து பெட்ரோலை பிடுங்கி கீழே ஊற்றி மேலும் அவர் மீது தண்ணீர் ஊற்றினர்.



இதனால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் தர்மசீலன் தன் மனைவியுடன் அங்கிருந்து சென்றார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...