சிபிஐ பதிவு செய்த வழக்கிலிருந்து விடுவிக்க கோரிக்கை - ஐ.ஜி பிரமோத் குமார் மனு நாளை விசாரணை

திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த பாசி நிதி நிறுவன வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி ஐ.ஜி., பிரமோத் குமார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


கோவை: வழக்கில் பிரமோத்குமாரை விடுவிப்பது குறித்து மனு மீதான வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது.

திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த பாசி பாரக்ஸ் டிரேடிங் என்ற நிதி நிறுவனம் முதலீட்டுக்கு அதிக வட்டி அளிப்பதாகக் கூறி முதலீடு செய்தவர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி பணத்தை திரும்பி தராமல் 58,571 பேரிடம் ரூ.930.71 கோடி மோசடி செய்துள்ளது.

இந்த மோசடி வழக்கில் இருந்து பாசி நிதி நிறுவன இயக்குநர்களை காப்பாற்றுவதற்காக ரூ.2.50 கோடி லஞ்சமாக பெற்றதாக அப்போதைய மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி பிரமோத்குமார், அப்போதைய சிபிசிஐடி டிஎஸ்பி ராஜேந்திரன், காவல் ஆய்வாளர் மோகன்ராஜ், திருநெல்வேலியைச் சேர்ந்த ஜான் பிரபாகரன், திருப்பூரைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகியோர் மீது சிபிஐ தனியே வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் கடந்த 2013-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டும் 10 ஆண்டுகளாக குற்றச்சாட்டு பதிவு செய்யபடாமல் இருந்து வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றசாட்டு பதிவு செய்ய வேண்டும் என கோவை சிபிஐ நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து 2 முறை குற்றம்சாட்டவர்களில் பிரோத்குமார் தவிர மற்ற 4 பேரும் ஆஜராகினர். பிரமோத்குமார் ஆஜர் ஆகாமல் கால அவகாசம் கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி தற்போது கரூரில் உள்ள செய்திதாள் காகித நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரியாக உள்ள ஐஜி பிரோத்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னையில் உள்ள சிபிஐ பொருளாதார குற்றப்பிரிவு டிஐஜி-க்கு உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து ஐஜி பிரமோத் குமார் இன்று காலை கோவை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிடிவாரண்டை தள்ளுபடி செய்து உள்ளார். இந்த வழக்கில் பிரமோத்குமாரை விடுவிப்பது குறித்து மனு அளிக்கப்பட்ட நிலையில் இம்மனு மீதான விசாரணை வருகின்ற அக்டோபர் 31-ம் தேதி நடைபெறும் என நீதிபதி தெரிவித்திருந்தார். அதன்படி இன்று நடைபெற்ற விசாரணையின் வழக்கு நாளை ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி அறிவித்துள்ளார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...