கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது

கோவையில் காலை முதல் பல்வேறு இடங்களில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்ட நிலையில் மதியத்திற்கு மேல் கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.


கோவை: கோவை ரயில் நிலையம், காந்திபுரம், உக்கடம், சுந்தராபுரம், பூ மார்க்கெட், வடகோவை, சாய்பாபாகாலனி, வெங்கடாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.



வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, காரைக்கால் ஆகிய பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்த நிலையில், நீலகிரிக்கு அருகில் உள்ள கோவையில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.



இந்நிலையில் இன்று காலை முதல் கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்கள் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்ட நிலையில் மதியத்திற்கு மேல் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.



கோவை ரயில் நிலையம், காந்திபுரம், உக்கடம், சுந்தராபுரம், பூ மார்க்கெட், வடகோவை, சாய்பாபாகாலனி, வெங்கடாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மேலும் ஓரிரு புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. மழையின் காரணமாக சாலையில் செல்வோர், மற்றும் வாகன ஓட்டிகள் சற்று சிரமத்திற்கு உள்ளாகினர்.



மேலும் கோவை மாநகரில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...