கோவை ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

கேரள மாநிலம் களமச்சேரியில் குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக கோவை ரயில் நிலையத்தில் போலிசார் தீவிர சோதனை நடத்தினர்.


கோவை: கொச்சின் குண்டு வெடிப்பை தொடர்ந்து கேரள தமிழக எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் களமச்சேரியில் உள்ள சாம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில் நடந்து வரும் யெகோவாவின் சாட்சிகளின் மண்டல மாநாட்டின் போது குண்டும் வெடிப்பு சம்பவம் நடந்தது. தேவாலயத்தில் நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் ஒரு பெண் உயிரிழந்த நிலையில் பலர் கவலைக்கிடமாக உள்ளனர் எனவும். மேலும் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவத்தின் எதிரொலியாக கேரளா தமிழக எல்லை பகுதிகளில் சோதனையை தீவிர படுத்த தமிழக டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் கோவை மாநகரின் முக்கியமான 15 தேவாலயங்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட தேவாலயங்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



மேலும் கோவை ரயில் நிலையத்திலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ரயில்வே பாதுகாப்பு படை டிஎஸ்பி ரித்தீஷ் பாபு தலைமையில் ரயில்வே காவலர்கள் மற்றும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.



ரயில் நிலையத்தில் அனைத்து நடைமேடைகளிலும் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் வெடிகுண்டுகளை கண்டறியும் நவீன கருவிகளைக் கொண்டும் மோப்ப நாய்களை கொண்டும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அங்கு பணிபுரியும் பணியாளர்களிடமும் காவல்துறையினர் பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...