கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கட்டிட ரூ.20.18 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்த புதிய கட்டிடத்தின் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி.பழனிச்சாமி ரிப்பன் வெட்டி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
அவருடன் தமிழக முதன்மை செயலர் கிரிஜா வைத்திய நாதன், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன், மாநகர காவல் ஆணையர் அமல் ராஜ், துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதிய கட்டிடத்தில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் திரளாக இருந்தனர். இதனால் அரசு அதிகாரிகள் கூட்ட நெரிசலில் சிக்கினர்.
தொடர்ந்து, கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தை திறந்து வைத்த முதலமைச்சர் கொடீசியா வளாகம் சென்றார்.