வால்பாறை அருகே காடம்பாறை பகுதியில் சுற்றுலா சென்ற உடற்கல்வி ஆசிரியர் நீரில் மூழ்கி பலி

வால்பாறை அருகே காடம்பாறை பகுதியில் நண்பர்களுடன் சுற்றுலா சென்ற உடற்கல்வி ஆசிரியர் காடம்பாறை அணை தண்ணீரில் மூழ்கி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: காடம்பாறை பகுதியில் சுற்றுலாச் சென்று அணையில் மூழ்கி உயிரிழந்த உடற்கல்வி ஆசிரியரின் உடலை காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆவில்சின்னம்பாலையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப்பால்சாமி 37 வயது. இவர் கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை என்பதால் நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது பிரதீப்பால்சாமி மற்றும் அவர்களது நண்பர்களான ஆல்வின் பிரபு, ஏசுதாஸ் மற்றும் மணிகண்டன் ஆகிய நான்கு பேரும் காடம்பாறை அணை பகுதியில் உள்ள அப்பராளியார் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.

அப்போது பிரதீப்பால்சாமி தண்ணீரில் மூழ்கியுள்ளார். சிறிது தூரம் தண்ணீர் இழுத்துச் சென்றதை கண்டு அவர்களது நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்று உள்ளனர்.



ஆனால் தண்ணீர் அதிக அளவில் வந்ததால் பிரதீப்பால்சாமி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து காடம்பாறை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காடம்பாறை காவல் நிலைய போலீசார் அப்பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதால் ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் உதவியுடன் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.



நீண்ட நேரத்துக்கு பிரதீப்பால்சாமி உடல் மீட்கப்பட்டது.



அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

நேற்று முன் தினம் வால்பாறையில் கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இன்று காடம்பாறை பகுதியில் ஆசிரியர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சுற்றுலா பயணிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து காடம்பாறை காவல் நிலைய போலீசார் அவரது நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...