மேட்டுப்பாளையம் அருகே பேக்கரி வியாபாரியிடம் பைக் திருடிய வாலிபர் கைது

மேட்டுப்பாளையம் அருகே பெத்திக்குட்டை பகுதியில் பேக்கரி கடை வியாபரியிடம் பைக் திருடிய நபரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: பேக்கரி வியாபரியிடம் பைக் திருடிய நபரை சிசிடிவி காட்சி மூலம் போலீசார் கைது செய்தனர்.

மேட்டுப்பாளையம் அருகே பெத்திக்குட்டை பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 50). இவர் இதே பகுதியில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த 16-ந்தேதி கடை முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்து இருந்தார். அப்போது யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதுதொடர்பாக சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதன் ஒருபகுதியாக அங்கிருந்த சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராவில் போலீசார் ஆய்வு செய்து பார்த்தனர். இதில் அடையாளம் தெரியாத ஒருவர் கந்தசாமியின் மோட்டார் சைக்கிளை திருடிச்செல்வது தெரியவந்தது. இந்த நிலையில் சிறுமுகை போலீஸார் அந்த பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு வந்த ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினார். அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்துகாவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை சேர்ந்த ரமேஷ் (35) என்பது தெரியவந்தது.

மேலும் அவரிடம் கந்தசாமியின் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து ரமேஷை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...