பேனர்களுக்கு பால் அபிசேகம் - லியோ படத்தை கொண்டாடிய கோவை விஜய் ரசிகர்கள்

கோவை புறநகரில் லியோ திரைப்படம் ரிலிஸானதை தொடர்ந்து பேனர்களுக்கு மாலை அணிவித்து பால் அபிஷேகம், சாலையில் நூற்றுக்கணக்கான தேங்காய்களை உடைத்தும் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: மேளதாளம் முழங்க குத்தாட்டம் போட்டு லியோவை வரவேற்ற கோவை மாவட்ட விஜய் ரசிகர்கள்.

லியோ திரைப்படம் இன்று வெளியான நிலையில் கோவை புறநகரில் உள்ள திரையரங்கு ஒன்றில் மேளதாளங்கள் முழங்க பேனர்களுக்கு மாலை அணிவித்து பால் அபிஷேகம் செய்த விஜய் ரசிகர்கள், சாலையில் நூற்றுக்கணக்கான தேங்காய்களை உடைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் லியோ திரைப்படம் இன்று காலை திரையரங்குகளில் வெளியானது. கடந்த வாரம் வெளியான இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், ட்ரெய்லரில் நடிகர் விஜய் கெட்ட வார்த்தை பேசுவது போன்ற காட்சி ஒன்று இடம் பெற்றிருந்ததால் சர்ச்சை வெடித்தது. குறிப்பாக அனைவரின் கவனமும் பெற்ற திரைப்படத்தின் ட்ரெய்லரில் இப்படி பேசியது தவறு என்று விமர்சனங்கள் எழுந்தன.

இதற்கிடையே லியோ சிறப்புக் காட்சி தொடர்பாக பிரச்சனை நீடித்து வந்தது. தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன. தமிழகத்தில் அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லை என தெரிவித்த நிலையில், முதல் காட்சி இன்று காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது.



ராட்சத பேனர்கள் வைக்கவும், கொண்டாட்டங்களில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி சோமனூர் சாலையில் உள்ள சவிதா திரையரங்கு முன்பு அதிகாலையே குவிந்த விஜய் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், விஜய் பேனர்களுக்கு மாலை அணிவித்தும், பால் அபிஷேகம் செய்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 



மேளதாளம் முழங்க குத்தாட்டம் போட்ட ரசிகர்கள், சாலையில்நூற்றுக்கணக்கான தேங்காய்களை உடைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து விஜய் ரசிகர்கள் கூறும்போது, தமிழகம் தவிர பிற மாநிலங்களில் 4 மணி காட்சி வெளியானது துரதிர்ஷ்டவசமானது. எந்த திரைப்படத்துக்கும் இது போன்ற தடைகள் ஏற்பட்டது இல்லை. லியோ திரைப்படத்துக்கு 4 மணி காட்சிக்கு அனுமதி அளித்திருந்தால் பள்ளி செல்லும் குழந்தைகள், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் கொண்டாட்டங்களை முடித்திருப்போம், இப்போதும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் கொண்டாட்டங்களில் ஈடுபட்டோம். திரைப்படத்தை வாழ்த்தி பேனர் வைக்க போலீஸ் அனுமதி மறுக்கின்றனர்.

ஆனால் திமுக, அதிமுக, பாஜக போன்ற அரசியல் இயக்கங்கள் பேனர்கள் வைக்க மட்டும் அனுமதி அளிக்கப்படுவது எப்படி என தெரியவில்லை, அரசியல் காரணங்களுக்காகவே இதுபோன்ற தடைகளை சந்தித்து வருகிறோம் என தெரிவித்தனர்‌.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...