கோவை மாநகராட்சியின் 29ஆவது ஆணையாளராக சிவகுரு பிரபாகரன் பதவியேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்ட சிவகுரு பிரபாகரன் இன்று பதவியேற்றுக்கொண்டார். மாநகராட்சியில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விரைவாக புரிந்து கொண்டு திட்டங்கள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.


கோவை: கோவை மாநகராட்சியின் 29-வது ஆணையாளராக இன்று பதவியேற்ற சிவகுரு பிரபாகரன் அவர்களுக்கு ஊழியர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.



கோவை மாநகராட்சி ஆணையாளராக இருந்த பிரதாப், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம் இணை மேலாண் இயக்குனராக பணி மாறுதல் பெற்றார். இதையடுத்து, கோவை மாநகராட்சியின் புதிய கமிஷனராக சிவகுரு பிரபாகரன் நியமிக்கப்பட்டார்.



இவர் இன்று பணிப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மேல ஒட்டங்காடு கிராமத்தை சேர்ந்தவர். இவர் தனது கிராமத்திற்கு பல்வேறு வசதிகளை உருவாக்கி தந்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வு முடிவுகளில் தமிழகத்தில் மூன்றாம் இடம் பிடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கோவை மாநகராட்சியின் 29-வது கமிஷனராக இன்று பதவியேற்றார். அவருக்கு ஊழியர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நிருபர்களிடம் கூறியதாவது:



நான் 2018-ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ஜ். சென்னை மாநகராட்சியில் இரண்டு வருடங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளேன். அங்கு பாதாளச்சாக்கடை, சாலைகள், மருத்துவம், பள்ளி உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொண்டு உள்ளேன். மூன்று வருடங்களாக சிவில் இன்ஜினியராக பணியாற்றிய அனுபவம் உள்ளது. மேலும், வட சென்னையில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு உள்ளேன். முதல்வர், அமைச்சர்கள், செயலாளர்கள் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி உள்ளனர். அவர்களிடம் இருந்து எப்படி பணிகளை திறம்பட செய்வது என கற்றுக்கொண்டேன்.

கோவை மாநகராட்சியில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விரைவாக புரிந்து கொண்டு திட்டங்கள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இங்குள்ள தன்னார்வலர்கள் நல்ல பணிக்கு பயன்படுத்தப்படுவர். சென்னையில் இருந்ததால் பாதாள சாக்கடை உள்ளிட்ட பணிகளில் எனக்கு நிறைய அனுபவம் உள்ளது. சரியாக கையாளுவேன் என கூறினார்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...