ஒன்றரை வயதில் ஓட்ட நாயகனாக மாறிய திருப்பூர் சிறுவன் - சான்றிதழ் வழங்கி பாராட்டு

26 வினாடிகளில் 50 மீட்டர் தூரம் ஓடி உலக சாதனை புத்தகத்தில் திருப்பூரை சேர்ந்த ஒன்றரை வயதான மிவான் என்ற சிறுவன் சாதனை படைத்துள்ளார்.


திருப்பூர்: ஒன்றரை வயது சிறுவனின் ஓட்டத்தை உலக சாதனை ஆக அங்கீகரித்து சிறுவன் மிவானுக்கு உலக சாதனை படைத்தமைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தை "கலாம் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்" நிறுவனம் வழங்கி கௌரவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வெங்கிட்டாபுரம் கிராமத்தை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவரது மகன் சதீஷ். இவர் தனது மனைவி அக்ஷ்தா மற்றும் தனது மகன் மிவானுடன் வசித்து வருகிறார்.



இவரது மகன் மிவான் என்பவருக்கு இரண்டு வயது ஆகும் நிலையில் பிறந்து 11 மாதத்திலேயே மிவான் நடக்க ஆரம்பித்துள்ளார். சதீஷ் காலையில் நடைபயிற்சிக்கு செல்லும்போது மிவானையும் உடன் அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் நிவானின் நடக்கும் ஸ்டைலை கண்டு ஆச்சரியப்பட்ட அவரது பெற்றோர்கள் இது குறித்து உடற்பயிற்சி வல்லுனர்களிடம் கேட்டுள்ளனர்.

மிவானுக்கு இயல்பாகவே விளையாட்டு வீரர்களுக்கு உண்டான திறன் உள்ளதாகவும் நல்ல பயிற்சியாளரை வைத்து பயிற்சி அளிக்குமாறு தெரிவித்துள்ளனர்.



மிவானின் திறமையை ஊக்கப்படுத்த நினைத்த அவரது பெற்றோர் மிவானுக்கு தொடர்ச்சியாக ஓட பயிற்சி கொடுத்துள்ளனர். இந்நிலையில் கலாம் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட் என்ற உலக சாதனை புத்தகத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். முதலில் 25 மீட்டர் தூரத்தை குறைந்த நேரத்தில் ஓடி சென்று கடக்க பயிற்சி அளித்துள்ளனர்.

பின்னர் ஒன்றரை வயதில் சிறுவன் மிவான் 50 மீட்டர் தூரத்தை 24 வினாடிகளில் ஓடிச் சென்று கடக்கும் வீடியோவை உலக சாதனை நிகழ்விற்கு அனுப்பியுள்ளனர்.



இந்நிகழ்வை உலக சாதனை ஆக அங்கீகரித்து சிறுவன் மிவானுக்கு உலக சாதனை படைத்தமைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தை "கலாம் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்" நிறுவனம் வழங்கி கௌரவித்துள்ளது.

இதுகுறித்து அவரது பெற்றோர்கள் கூறுகையில் தன் மகனின் திறமை என்ன என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். அவரை மேலும் ஊக்குவித்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த உலக சாதனை நிகழ்விற்கு விண்ணப்பித்திருந்தோம். ஒன்றரை வயதில் தனது மகனின் திறமைக்கு உலக சாதனை அங்கீகாரம் அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் மேலும் சிறுவன் மிவானுக்கு தொடர்ச்சியாக பயிற்சிகள் அளிக்க உள்ளதாகவும் அவரை தொடர்ச்சியாக ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஒன்றரை வயதில் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சிறுவன் மிவானுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...