கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவையில் சிறப்பு புகைப்படக் கண்காட்சி

கோவை வ.உ.சி மைதானத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, இதழாளர் – கலைஞர் குழுவின் சார்பில், இதழாளர் – கலைஞர் சிறப்பு புகைப்படக் கண்காட்சி துவங்கப்பட்டது.


கோவை: கலைஞரின் பல்வேறு பரிமாணம், தமிழ் அறிஞர்களுடன், அரசியல் ஆளுமைகளுடன், பிரதமர்களுடன் எடுத்த புகைப்படங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.



கோவை வ.உ.சி மைதானத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, இதழாளர் – கலைஞர் குழுவின் சார்பில், இதழாளர் – கலைஞர் சிறப்பு புகைப்படக் கண்காட்சி துவங்கப்பட்டது.



இக்கண்காட்சியினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, இதழாளர் – கலைஞர் நூற்றாண்டு விழாக் குழுத் தலைவரும் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சருமான சாமிநாதன், விழாக் குழு இணைத் தலைவர், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், விழாக் குழு இணைத் தலைவர், பால்வளத்துறை மனோ தங்கராஜ் ஆகியோர் முன்னிலையில் பாரதிய வித்யா பவன் மற்றும் குமரகுரு கல்வி நிறுவனங்கள் தலைவர் டாக்டர்.பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் திறந்து வைத்தார்.



இப்புகைப்படக் கண்காட்சியில் கலைஞரின் பல்வேறு பரிமாணம், தமிழ் அறிஞர்களுடன், அரசியல் ஆளுமைகளுடன், பிரதமர்களுடன் கலைஞர், குடியரசு தலைவர்களுடன் கலைஞர் உள்ளிட்ட தலைப்புகளில் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.



இக்கண்காட்சி ஒரு மாதம் வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, இதழாளர் கலைஞர் குழுவின் உறுப்பினர்கள், என்.ராம்(ஹிந்து நாளிதழ்), நக்கீரன் கோபால், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...