விதை நெல் விற்பனை நிலையங்களில் துணை இயக்குனர் ஆய்வு - ரூ.11 லட்சம் மதிப்பிலான நெல் விதை விற்க தடை

தாராபுரம் வட்டாரத்தில் உள்ள தனியார் நெல் விதை உற்பத்தி மற்றும் விதை விற்பனை நிலையங்களில் ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் பெ.சுமதி தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.


திருப்பூர்: தாராபுரம் வட்டாரத்தில் உள்ள தனியார் நெல் விதை உற்பத்தி மற்றும் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்த ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் பெ.சுமதி தலைமையிலான குழுவினர்,சுமார் ரூ.11 லட்சம் மதிப்பிலான 36,500 கிலோ எடை அளவிலான விதையை விற்பனை செய்ய தடை விதித்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டாரத்தில் உள்ள தனியார் நெல் விதை உற்பத்தி மற்றும் விதை விற்பனை நிலையங்களில் ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் பெ.சுமதி தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.



ஆய்வின் போது விதை விற்பனை உரிமம், விதை இருப்பு மற்றும் விலை விபரப்பலகை, விதை இருப்பு பதிவேடு, விதை கொள்முதல் பட்டியல், விதை விற்பனை பட்டியல், உணர்மை நிலை விதைகளுக்கான, விதையின் ஆதாரத்திற்கான ஆவணங்கள், வயல் மட்ட பதிவேடு, விதை சுத்திப் பதிவேடு, முளைப்புதிறன் பரிசோதனை முடிவு அறிக்கை போன்றவை ஆய்வு செய்யப்பட்டது. மேலும் விதை சுத்திகரிப்பு செய்யும் எந்திரங்களை பார்வையிட்டு விதை மிதவை அளவு விதைகள் மற்றும் இருப்பு வைக்கப்பட்டுள்ள குடோன் ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வின் போது விதை இருப்பிற்கும் புத்தக இருப்பிற்கும் வேறுபாடு, உண்மை நிலை விதைகளுக்கான விதையின் ஆதாரத்திற்கான ஆவணங்கள், வயல் மட்ட பதிவேடு, விதை சுத்திப் பதவேடு, முளைப்புதிறன் பரிசோதனை முடிவு அறிக்கை போன்றவை இல்லாத விதைகள் மற்றும் விற்பனை பட்டியல் முறையாக பாராமரிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதனால் சுமார் ரூ.11 லட்சம் மதிப்பிலான 36,500 கிலோ எடை அளவிலான விதையை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

இதுபற்றி துணை இயக்குனர் சுமதி கூறியதாவது, விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் போது விற்பனை ரசீது கொடுக்கப்பட வேண்டும். அதில் விதையின் பெயர், ரகம், குவியல் எண், காலாவதி நாள் ஆகியவற்றுடன் விவசாயின் பெயர் மற்றும் முகவரியுடன் விதை வாங்குபவரின் கையொப்பம் பெறப்பட்டிருக்க வேண்டும். மேற்கூறிய விதை விற்பனை தொடர்பான ஆவணங்கள் இல்லாமல் விதை விற்பனை செய்வது விதைச் சட்டம் 1966 விதை விதிகள்1968 மற்றும் விதை கட்டுப்பாட்டு ஆணை 1983 ஆகியவற்றின் மீது விதி மீறல் ஆகும். இது போன்ற விதை விற்பனை விதிமீறலகள் கண்டறியப்படும் பட்சத்தில் விதை விற்பனையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் மீது "கடும் நடவடிக்கை" எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...