திரைத்துறை திமுக ஆட்சிகாரர்களுக்கு செழிப்பாக உள்ளது - வானதி சீனிவாசன் பேட்டி

கோவை டாடாபாத் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மியாவாக்கி முறையில் குறுங்காடுகள் வளர்க்கும் விருட்சம் எனும் திட்டத்தை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பாஜக மகளிர் அணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் மரக்கன்றுகளை நடவு செய்து துவக்கி வைத்தார்.


கோவை: திரைத்துறை ஆட்சிகாரர்களுக்கு செழிப்பாக உள்ளது. அதை தாண்டி யாராவது படத்தை விட்டார்கள் என்றால் அவர்களுக்கு தியேட்டர் கிடைக்காது. இதற்கு லியோ திரைப்படம் ஒரு முன் உதாரணம் என்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.



கோவை டாடாபாத் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மியாவாக்கி முறையில் குறுங்காடுகள் வளர்க்கும் விருட்சம் எனும் திட்டத்தை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் மரக்கன்றுகளை நடவு செய்து துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது பேசிய அவர், பள்ளி குழந்தைகளுக்காக கோவை தெற்கு தொகுதியில் பல்வேறு திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறோம்.

தற்போது விருட்சம் என்ற திட்டத்தின் மூலம் கோவை மாநகராட்சியில் உள்ள 7 பள்ளிகளில் குறுங்காடுகள் வளர்க்கும் இந்த திட்டத்தை துவக்கி உள்ளோம். இதன் மூலம் குழந்தைகளுக்கு மரம் நடும் ஆர்வம் பொறுப்பும் உருவாகிறது. கரிமல வாயு வெளியிடு அதிகமாகி வருகிறது. இதற்கு சமமாக கார்பன் நியூட்ரல் உருவாக்க வேண்டும் இதற்கு தகுந்தாற் போல் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் மரம் நட வேண்டும்.

மாநகராட்சி இது மாதிரியான திட்டத்தை செயல்படுத்த வேண்டும். குறுங்காடுகள் வளர்ப்பதில் நீடித்து வளர்வது உள்ளூர் மரங்கள் மட்டுமே. சாலை விரிவாக்கத்திற்கு எடுக்கபடும் மரங்கள் இன்னொரு இடத்தில் வைக்க வேண்டும் என்பது எனது கோரிக்கை. அமைச்சர் சேகர்பாபு,அண்ணாமலை குறித்து விமர்சனம் செய்ததற்கு பதிலளித்த வானதி சீனிவாசன், திமுக பைல்ஸ், எக்ஸ்பிரஸில் ஏறுகிறதா, ஜெட்டில் ஏறுகிறதா, என்பதை பார்க்கத்தான் போறோம்.

மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு சொல்லி கொடுப்பதற்கு ஆசிரியர்களே இல்லை. அடிப்படை வசதிகளும் இல்லை.. டெங்கு தடுப்பு குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர், கொசு மருந்து அடித்ததை பார்த்ததே இல்லை. எனது சட்டமன்ற அலுவலகத்தில் கொசு அடிப்பதே என்னுடைய வேலையாக இருக்கின்றது. மாநகராட்சி ஆணையாளர் மாற்றம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர். அரசு அதிகாரிகள் தன்னுடைய வேலையை செய்வதற்கு முன்னரே அதிகாரிகள் தொடர்ச்சியாக மாற்றப்பட்டு வருகின்றனர்.

அடிக்கடி அதிகாரி மாற்றத்தை கை விட வேண்டும். திரைத்துறை ஆட்சிகாரர்களுக்கு செழிப்பாக உள்ளது. அதை தாண்டி யாராவது படத்தை விட்டார்கள் என்றால் அவர்களுக்கு தியேட்டர் கிடைக்காது. இதற்கு லியோ திரைப்படம் ஒரு முன் உதாரணம். இதனால் தான் ரெட்டிக்கு சாதகமாக இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு பலனில்லை. ஒட்டுமொத்த திரைத்துறையை கையில் வைத்துள்ளனர். இதற்கு முன்னர் இப்படி இருந்த தால்தான் இவர்களின் ஆட்சி தூக்கி எறியப்பட்டது என தெரிவித்தார்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...