மாணவர்கள் மத்தியில் ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

கோவை பார்க் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி, TAARK Equipment பிரைவேட் லிமிடெட் இடையே ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.


கோவை: வேளாண் துறை மாணவர்கள் வேளாண்மையில் எதிர்கொள்ளும் சவால்களுக்கான தீர்வு கொடுக்கும் வகையில் அவர்களின் ஆராய்ச்சிகள் அமைந்திருக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் வேளாண்மை பொறியியல் துறை, புவிசார் பொறியியல் துறைகளின் சங்கம் துவக்க விழா மற்றும் TAARK Equipment பிரைவேட் லிமிடெட் கம்பெனியின் ஆராய்ச்சி & மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் Oct 17 2023 அன்று பார்க் கல்வி வளாகத்தில் நடைபெற்றது.

Dr. லக்ஷ்மணன், முதல்வர், பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வரவேற்புரை வழங்கினார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கிடைக்கும் பயன்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.



இந்த விழாவினை தலைமையேற்று நடத்திய பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி Dr. அனுஷா ரவி தனது உரையில் 2020 ஆண்டு இந்த துறையின் முதல் சங்க துவக்க விழாவில் இந்தியாவின் நிலவு மனிதர் Dr. மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டதை நினைவு கூர்ந்தார்.

வேளாண் துறை மாணவர்கள் வேளாண்மையில் எதிர்கொள்ளும் சவால்களுக்கான தீர்வு கொடுக்கும் வகையில் அவர்களின் ஆராய்ச்சிகள் அமைந்திருக்க வேண்டும் என்றார். உயிரினங்கள் வாழ்வதற்கான மாசில்லா சுற்றுச்சூழல் உருவாக்க துணை நிற்க வேண்டும் என்றார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் மாணவர்கள் வேளாண் உபகரணங்கள் ஆராய்ச்சியிலும், பயன்பாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.



மேலும் தனது உரையில் இந்தியாவுக்கான பணமா நாட்டின் தூதர் மற்றும் தூதரக ஜெனரல் யாசியேல் புரில்லோ, பனாமா நாட்டில் மரங்கள் வாழ்வதற்கு சட்ட உரிமை கொடுப்பதாகவும், நாமும் நமது நாட்டின் மரங்களை காக்க வேண்டும் என்றார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு வருகை புரிந்த TAARK நிறுவனத்தின் மேலாளர் கிருஷ்ண பிரசாத், வேளாண்மையில் ஆர்வம் கொண்டு வேளாண் பொறியியல் துறையில் பயிலும் மாணவர்களை வாழ்த்தினார்.

மாணவர்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக TAARK நிறுவனம் தனது முழு ஒத்துழைப்பை கொடுக்கும் என்று கூறினார்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...