தங்க நகை சேமிப்பு திட்டத்தில் 10 முதல் 15 சதவீதம் தள்ளுபடி - தனிஷ்க் ஜுவல்லரி அறிவிப்பு

சேமிப்பு திட்டத்தின் கீழ் நகை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை என தனிஷ்க் தென்னிந்திய மண்டலத்தின் தலைமை அதிகாரி கோவையில் அறிவித்துள்ளார்.


கோவை: கோவையில் புதிதாக திறக்கப்பட்ட இரண்டு கிளைகளிலும் நகை வாங்குபவர்களுக்கு நகை,வைரம் மதிப்பிற்கு ஏற்ப தங்க நாணயங்கள் இலவசமாக வழங்கப்படும் என தனிஷ்க் அறிவித்துள்ளது.

கோவை ஒப்பணக்கார வீதி மற்றும் மேட்டுப்பாளையம் சாலையில் தனிஷ்க் ஜுவல்லரி திறப்பு விழா நடைபெற்றது. இரண்டு கிளைகளை டைட்டன் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் வெங்கட்ராமன் திறந்து வைத்தார்.



அதில் சிறப்பு விருந்தினராக தென்னிந்திய மண்டலத்தின் தலைமை அதிகாரி சரத் மற்றும் தென்னிந்திய மண்டலத்தின் மேலாளர் நரசிம்மன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இரண்டு கிளைகளின் உரிமையாளர் அசோக் மற்றும் செல்வம் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தென்னிந்திய மண்டலத்தின் தலைமை அதிகாரி சரத் கூறியதாவது.

தமிழ்நாட்டில் மொத்தம் 55 தனிஷ்க் கிளைகள் இருப்பதாகவும் அதில் கோவை மாவட்டத்தில் 4 கிளைகள் இருப்பதாக தெரிவித்தார்.

டாட்டா மற்றும் டைட்டன் நிறுவனத்தின் குழுவை சேர்ந்தது தான் தனிஷ்க் நிறுவனம் என்றும் புதிய வரவுகளாக தரோஹர் & காக்கத்தியா தங்க நகை கலெக்ஷன்களை அறிமுகம் செய்து உள்ளதாக கூறினார்.

குறிப்பாக திருமண கலெக்ஷன் மற்றும் கலர் கற்கள் கொண்ட நகைகள் என ஒவ்வொரு கிளைகளிலும் சுமார் 4000"க்கும் மேற்பட்ட டிசைன்கள் இருப்பதாக தெரிவித்தார்.

கோவையில் புதிதாக திறக்கப்பட்ட இரண்டு கிளைகளிலும் நகை வாங்குபவர்களுக்கு நகை,வைரம் மதிப்பிற்கு ஏற்ப தங்க நாணயங்கள் இலவசமாக வழங்கப்படும் என்று கூறினார்.

தங்க நகைகளில் தயாரிப்புக்கு ஏற்றது போல சலுகைகள் வழங்க இருப்பதாகவும் அனைத்து நகைகளுக்கும் எக்ஸ்சேஞ்ச் செய்ய இருப்பதாக கூறினார்.

தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேருபவர்களுக்கு 10"முதல்"15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். பொதுவாக அனைத்து நோய்களுக்கும் செய்கூலி சேதாரம் உண்டு ஆனால் சேமிப்பு திட்டத்தின் கீழ் நகை வாங்கினால் அதற்கு சிறப்பு சலுகை இருப்பதாக கூறினார். தனிஷ்க் நிறுவனத்திற்கு 10,000"க்கு மேற்பட்டோர் கைவினை மூலமாக தங்க நகைகளை செய்து வருகின்றனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...