தாராபுரம் அரசு கல்லூரியில் இலக்கிய மன்ற விழா - மாணவர்கள் ஆர்வம்

தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இலக்கிய மன்ற விழாவில் இலக்கியத்தின் பங்களிப்பு மற்றும் தாக்கம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.


 திருப்பூர்: மனித வாழ்க்கையில் மொழி மற்றும் இலக்கியத்தின் பங்களிப்பு மற்றும் தாக்கம் குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்துரைத்தனர்.

தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கில துறை சார்பில் இலக்கிய மன்ற விழா நடைபெற்றது.விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் க.பத்மாவதி தலைமை தாங்கினார். ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் பேராசிரியர் ரா. சிவசாமி வரவேற்று பேசினார்.



முத்தூர் கருப்பணன் மாரியப்பபன் கல்லூரியின் ஆங்கில துறை உதவிப் பேராசிரியர் அ.அமிர்தலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மொழி-வாழ்க்கை இயக்கியார் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மனித வாழ்க்கையில் மொழி மற்றும் இலக்கியத்தின் பங்களிப்பு மற்றும் தாக்கம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

முன்னதாக இரண்டாம் ஆண்டு ஆங்கில இலக்கிய மாணவி மா.தனலட்சுமி ஆங்கிலத்தின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடையே எடுத்துரைத்தார். இரண்டாமாண்டு ஆங்கில இலக்கிய மாணவிகள் செ.அஸ்வினி, ரா.தீபிகா ஆகியோர் விழாவை தொகுத்து வழங்கினர்.

இறுதியாக முதலாமாண்டு ஆங்கில இலக்கிய மாணவி மகமுதா இர்பானா நன்றி கூறினார்.

ஆங்கிலத் துறை கெளரவ விரிவுரையாளர்கள் ர.ஹர்ஷ் தபே, கார்த்திகேயன், போ.சுதாகர் மற்றும் ம.சந்தியா ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...