காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நான்கு நாட்களாக வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.



அதன் தொடர்ச்சியாக ஐந்தாம் நாளான இன்று ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, தாமதமாகிக்கொண்டே வரும் உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும். அலுவல் பணியில் உதவி இடைநிலை இயக்குநர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகிய காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். கிடப்பில் உள்ள அதிகாரிகள் இடமாற்றத்தினை நிரைவேற்ற வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்ததால் அப்பகுதியில் முற்றிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சுமார் 180-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...