உடுமலை அருகே திமுக சார்பில் சமுதாய வளைகாப்பு - கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உடுமலை அருகே குடிமங்கலத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் சாமிநாதன் பங்கேற்று கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கினார்.


திருப்பூர்: திமுக சார்பில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சாமிநாதன், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பல நல்ல திட்டங்களை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டி வருவதாக தெரிவித்தார்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் வடக்கு ஒன்றியம் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நூற்றுக்கு மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு இன்று குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் அனிக்கடவு கிரி தலைமையில் நடைபெற்றது.



இந்த நிகழ்வில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் பி.சாமிநாதன் கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை வழங்கினார்.



மேலும் அவர் பேசுகையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நல்லாட்சியில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறார்.

இங்கு குடிமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் 100 கர்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு வெகு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. இதே போல தேர்தல் வாக்குறுதியில் அளித்த முக்கியமான வாக்குறுதி மகளிர் உரிமைத் திட்டம் தற்போது நிறைவேற்றப்பட்டு உள்ளது. மேலும் காலை உணவு திட்டம் உட்பட பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக முதல்வர் முனைப்பு காட்டி வருகிறார் என பேசினார். திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இலா.பத்மநாபன், ஒன்றிய குழு உறுப்பினர் கவிதா கிரி, குடிமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...