கருமத்தம்பட்டி பேருந்து நிறுத்தம் வராமல் சென்ற 2 அரசு பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு அபராதம்

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பேருந்து நிறுத்தத்திற்கு வராமல் சென்ற இரண்டு அரசு பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.


கோவை: கோவை அருகே பேருந்து நிறுத்தத்திற்கு வராமல் சென்ற இரண்டு அரசு பேருந்துகளை நிறுத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் நடத்துனரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளும் கருமத்தம்பட்டி நால்ரோடு பேருந்து நிறுத்தத்திற்கு வந்து பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆனாலும் பெரும்பாலான நேரங்களில் பேருந்துகள் கருமத்தம்பட்டி நால்ரோடு பேருந்து நிறுத்தத்திற்கு வராமல், மேம்பாலத்தில் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் சென்று நெடுஞ்சாலையிலேயே பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றனர்.

ஒரு சில பேருந்துகள் கருமத்தம்பட்டியில் நிற்காது என்று கூறி பயணிகளை ஏற்ற மறுத்து வருவதாக புகார்கள் வந்தன. இந்த நிலையில் சூலூர் வட்டார போக்குவத்து அதிகாரி சண்முகசுந்தரம் கருமத்தம்பட்டி பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது திருப்பூரில் இருந்து கோவை நோக்கி வந்த 2 அரசு பேருந்துகள் கருமத்தம்பட்டி நால்ரோடு பேருந்து நிறுத்தத்திற்கு வராமல் மேம்பாலத்தின் வழியாக சுமார் 1 கிலோமீட்டர் தூரம் தள்ளிச்சென்று பயணிகளை நெடுஞ்சாலையில் இறக்கி விட்டது தெரியவந்தது.



உடனே சம்பந்தப்பட்ட அரசு பேருந்துகளை நிறுத்தி ஓட்டுனர் மற்றும் நடத்துநருக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் அபராதம் விதித்தார்.

மேலும் தொடர்ந்து அத்துமீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பான செல்போன் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...