மழை வேண்டி கோவையில் தவளைகளுக்கு திருமணம் - ஊர்மக்கள் நூதன ஏற்பாடு

கோவையில் தொடர்ந்து மழை பெய்ய வேண்டியும், பொதுமக்கள் நலமாக இருக்க வேண்டியும் வேடப்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி மார்ப்பிள்ளை-பெண் ஊர்வலத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.


கோவை: மழை வேண்டி குரும்பபாளையத்தில் உள்ள விநாயகர் கோவிலில் ஊர் பொதுமக்கள் தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்து மங்கள அரிசியை தூவி வாழ்த்தினார்.

கோவையில் தொடர்ந்து மழை பெய்ய வேண்டியும், பொதுமக்கள் நலமாக இருக்க வேண்டியும் வேடப்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்படி ஆண் தவளைக்கு மாப்பிள்ளை போல் வேடம் அணிந்து குரும்பபாளையம் வீதியில் வழியாக மாப்பிள்ளை ஊர்வலம் மேளதாளம் முழங்க நடைபெற்றது.

தொடர்ந்து குரும்பபாளையம் ஊர் கவுண்டர் வீட்டில் பெண் தவளைக்கு சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டு பெண் அழைப்பு ஊர்வலம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து குரும்பபாளையத்தில் உள்ள விநாயகர் கோவிலில் ஊர் பொதுமக்கள் தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

அப்பொழுது கூடி இருந்த பொதுமக்கள் மங்கள அரிசியை தூவி வாழ்த்தினார். பின்னர் மஞ்சள் நீர் தொட்டியில் தவளைகள் விடப்பட்டது. அதைத் தொடர்ந்து மீண்டும் ஊரை சுற்றி வந்து தவளைகள் குடும்பம் நடத்துவதற்காக கிணற்றில் விடப்பட்டது. இந்த நிகழ்ச்சி 18 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைபெற்று உள்ளது. இந்த ருசிகர சம்பவத்தை காண ஏராளமான மக்கள் திரண்டனர்.

இதற்காக ஊரில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று உணவு சேகரித்து அதை முனியப்பன் கோவிலில் படைத்து மூன்று கன்னிப் பெண்களுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்த திருமண நிகழ்ச்சியில் முடிந்தவுடன் மழை வேண்டி குரும்ப்பாளையம் ஊரில் உள்ள துரை வீரசாமி கோவிலில் கிடா வெட்டி படையல் வைத்து பூஜை நடைபெறும். இரவு சாலையில் பொதுமக்கள் அமர்ந்து படையல் சாப்பிடும் நிகழ்ச்சிநடைபெறும்.

இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் மழை பெய்யும் என்பது ஐதீகம். இது காலம் காலமாக நடந்து வருகிறது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...