தாராபுரம்-உடுமலை சாலையை அகலப்படுத்த வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

தாராபுரம் - உடுமலை மாநில நெடுஞ்சாலை மிக குறுகலாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே விபத்துக்களை தவிர்க்க சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: மக்களின் நலனை கருத்தில் கொண்டு மாநில தேசிய நெடுஞ்சாலை துறையினர் தாராபுரம்-உடுமலை சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாராபுரத்தில் இருந்து உடுமலைக்கு மாநில நெடுஞ்சாலை உள்ளது. கொண்டரசம்பாளையம், தளவாய்பட்டிணம், செலாம் பாளையம், ஊத்துப் பாளையம், சின்னக்காம்பாளையம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஊர்களுக்கு இந்த சாலை வழியாக செல்ல வேண்டும்.

முக்கியதுவம் வாய்ந்த மாநில நெடுஞ்சாலை தாராபுரத்தில் இருந்து தளவாய்பட்டிணம் வரை சுமார் 10 கி.மீ. மிக குறுகலாக உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் என ஏராளமாக உள்ளது.

இந்நிலையில் தினசரி இதன் வழியாக நூற்றுக்கணக்கான நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. உடுமலை சாலையில் சுமார் 10 கிலோ மீட்டருக்கு மேலாக உள்ள சாலையில் எதிரெதிரே வரும் வாகனங்கள் ஒதுங்க முடியாத அளவுக்கு பாதை குறுகியே உள்ளது. அத்துடன் எதிரே வாகனங்கள் வழியில்லாமல் சில சமயம் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு விபத்து ஏற்பட்டு வருகிறது.

இந்த சாலையை விரிவுபடுத்த கோரி அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மாநில நெடுஞ்சாலை துறையினருக்கு பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் தினசரி வாகன விபத்துகளில் சிக்கி உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மாநில தேசிய நெடுஞ்சாலை துறையினர் தாராபுரம்- உடுமலை சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...