உடுமலை திருமூர்த்தி அணை காண்டூர் கால்வாயில் தண்ணீர் திருடப்படுவதாக காவல் நிலையத்தில் புகார்

திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணை காண்டூர் கால்வாயில் தண்ணீர் திருடுவோரின் இணைப்பு துண்டித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: தண்ணீர் திருட்டில் ஈடுபடுவர்களை கண்காணிக்க போலீஸ் மூலம் ரோந்து பணியை தீவிரப்படுத்த பொதுமக்களும் விவசாயிகளும் வேண்டுகோள்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த திருமூர்த்தி அணை மூலமாக பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்தின் கீழ் 3 லட்சத்துக்கு 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அணைக்கு மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளில் உற்பத்தியாகின்ற ஆறுகள் ஓடைகள் மற்றும் பிஏபி தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலம் பெறப்படும் தண்ணீர் நீராதாரமாக உள்ளது. திருமூர்த்தி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாததால் காண்டூர் கால்வாய் மூலமாக தண்ணீர் கொண்டு வரப்பட்டு 4-ம் மண்டல பாசனத்திற்கு கடந்த மாதம் 20-ம் தேதி முதல் தண்ணீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் காண்டூர் கால்வாயில் வரும் தண்ணீரை அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு முறையற்ற வகையில் குழாய் மற்றும் மோட்டார் அமைத்து திருடுவதாக பொதுப்பணித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் திருமூர்த்தி அணை மற்றும் சீர்மட்ட கால்வாய் பிரிவு உதவிப் பொறியாளர் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள் தண்ணீர் திருட்டை தடுக்கும் வகையில் கடந்த 6-ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பிளாஸ்டிக் குழாய் மூலமாக காண்டூர் கால்வாயில் தண்ணீர் திருடப்பட்டது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் திருமூர்த்தி நகர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் தண்ணீர் திருடியது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து திருட்டுக்கு பயன்படுத்திய குழாய் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் இது குறித்து காவல்துறையில் நாகராஜ் மீது புகார் அளிக்கப்பட்டது. அதே போன்று கடந்த 7-ம் தேதி வளையபாளையத்திற்கு செல்லும் வரத்து கால்வாயில் தண்ணீர் திருட்டு நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் பொதுப்பணித்துறை அதிகாரியினர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பிளாஸ்டிக் குழாய் அமைத்து தண்ணீர் திருட்டு நடைபெறுவது கண்டறியப்பட்டது.



அதன் பேரில் நடைபெற்ற விசாரணையில் நாகராஜ், செல்வராஜ், காந்திமதி, கஞ்சிமலை ஆகியோர் தண்ணீர் திருட்டில் ஈடுபடுவது தெரிய வந்தது.



அதன் பேரில் உதவி பொறியாளர் மாரிமுத்து தளி போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் தண்ணீர் திருட்டில் ஈடுபடுவர்களை கண்காணிக்க போலீஸ் மூலம் ரோந்து பணியை மேற்கொள்ளவும், மேலும் ரோந்து பணிக்கு செல்லும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கிடவும் அதிகாரிகள் தரப்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...