உடுமலை நாராயண கவிராயர் மணிமண்டபத்தில் கூடுதல் புத்தகங்கள் வைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

நாராயணகவி மணிமண்டபத்தில் போட்டி தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களின் நலன் கருதி புத்தகங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். அதே போன்று போட்டித் தேர்வில் வெற்றி பெற்று செல்லும் தேர்வர்கள் புத்தகங்களை வாங்கி கொடுத்து உதவ வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: போட்டித் தேர்வு புத்தகங்கள் பற்றாக்குறை, செய்தித்தாள்கள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாணவர்கள் போட்டி தேர்வுக்கு தயராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

உடுமலை குட்டை திடலில் நாராயணகவி மணிமண்டபம் உள்ளது. குறிப்புதவி நூலகமான இங்கு போட்டி தேர்வுக்கு தயாராகும் வகையில் பொது அறிவு, நடப்பு நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு வகையான புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன.

இங்கு நாள்தோறும் ஏராளமான போட்டித் தேர்வர்கள் வருகை தந்து குறிப்பு எடுத்து தயாராகி வருகின்றனர். ஆனால் போட்டித் தேர்வு புத்தகங்கள் பற்றாக்குறை, செய்தித்தாள்கள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் முழுமூச்சில் தேர்வு தயராக இயலாத நிலை உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மக்களுக்கு சேவையாற்ற அரசுப்பணியில் அமர வேண்டும் என்ற நோக்கத்தோடு முழுமூச்சாக தேர்வர்கள் தயாராகி வருகின்றனர்.

ஆனால் தற்போதைய நிலையில் சுமார் 2 ஆயிரம் புத்தகங்களே உள்ளது. போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டும் என்றால் பல்வேறு தலைப்புகளில் 5 ஆயிரம் புத்தகங்களுக்கு மேல் இருக்க வேண்டும். புத்தகங்கள் பற்றாக்குறையாக இருப்பதால் தேர்வில் பின்னடைவை சந்திக்க வேண்டிய சூழல் உள்ளது. அதுமட்டுமின்றி நாராயணகவி வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் எழுதிய புத்தகங்கள் சொற்ப அளவில் மட்டுமே உள்ளது. அதையும் அதிக படுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கான சிறுகதை புத்தகங்கள் முற்றிலுமாக இல்லை. அதுமட்டுமின்றி நடப்பு நிகழ்வுகளை தெரிந்து கொள்ளும் வகையில் செய்தித்தாள்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டியதும் அவசியமாகும். எனவே நாராயணகவி மணிமண்டபத்தில் போட்டி தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களின் நலன் கருதி புத்தகங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். அதே போன்று போட்டித் தேர்வில் வெற்றி பெற்று செல்லும் தேர்வர்கள் புத்தகங்களை வாங்கி கொடுத்து உதவ வேண்டும். இதனால் இளைய தலைமுறையினர் பயன் பெறுவதற்கு எதுவாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...