கறிக்கோழி விற்பனை சரிவடைவதால், கொள்முதல் விலை சரியும் பண்ணையாளர் அச்சம்

புரட்டாசி மாதம் என்பதால் கறிக்கோழி விலை சரிந்து வருவதால் கொள்முதல் விலை விழ்ச்சி அடையும் ஆபத்து இருப்பதாக கோவை, திருப்பூர், ஈரோடு கறிக்கோழி பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்


கோவை: கறிக்கோழி விற்பனை சரிவு கோழி பண்ணையாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

கோவை, ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களில், கறிக்கோழி பண்ணைகள் மூலம், வாரம் ஒரு கோடி கோழி குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு செயலாளர் சுவாதி கண்ணன் கூறியதாவது:அண்டை மாநிலமான கேரளாவில் மட்டும், வாரம், 50 லட்சம் கோழிக்குஞ்சுகள் விற்பனையாகி வருகின்றன.

கேரளாவில், தொடர் மழை காரணமாக, 20 சதவீதம் வரை கறிக்கோழி விற்பனை சரிவடைந்து வருகிறது. இதுதவிர, விழாக்கள், பண்டிகைகள் காரணமாகவும் விற்பனை குறைந்துள்ளது. தமிழகத்தில், புரட்டாசி மாதம் என்பதால், அசைவம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதுவும் விற்பனை குறைவதற்கான காரணமாக உள்ளது.தற்போது, கொள்முதல் விலை, கிலோ 108 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விற்பனை குறைந்துள்ளதால், அதற்கு ஏற்ப உற்பத்தியும் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. விற்பனை சரிவு காரணமாக, வரும் நாட்களில் கொள்முதல்விலையும் குறைய வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.தற்போதுள்ள தீவன விலை, ஆள் கூலி, வண்டி வாடகை, பராமரிப்பு செலவு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், கறிக்கோழிகளின் அடக்க விலை, 100 ரூபாய் என கணக்கிடப்படுகிறது. கொள்முதல் விலை மேலும் குறைந்தால், பண்ணையாளர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என அவர் அச்சம் தெரிவித்தார்

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...