‌‌ யானையை பாதுகாப்போம் என அனைவரையும் உறுதிமொழி எடுக்க வைத்த சிறுமியின் வைரல் வீடியோ காட்சிகள்

கோவை பேரூர் பகுதியில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் யானைகள் பற்றி நேயா என்ற பள்ளி மாணவி பேசிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரவேற்பை பெற்று வருகிறது.


கோவை: யானையை நாம் பாதுகாக்க வேண்டும். யானை காட்டை உருவாக்குகிறது. காடு நன்றாக இருந்தால் மற்ற விலங்குகள் நன்றாக இருக்கும் என்று பேசிய பள்ளி மாணவி, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை உறுதிமொழியும் எடுக்க வைத்தார்.

வனவிலங்குகள் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை பேரூர் பகுதியில் உள்ள தமிழ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் நேயா என்ற தனியார் பள்ளி மாணவி யானைகளைப் பற்றி அபாரமாக பேசி அனைவரது பாராட்டையும் பெற்றார்.

எந்த கோவிலுக்கு போனாலும் முதலில் விநாயகரை கும்பிடுவோம். விநாயகர் யானை ரூபம் கொண்டவர். யானையை நாம் பாதுகாக்க வேண்டும். யானை காட்டை உருவாக்குகிறது. காடு நன்றாக இருந்தால் மற்ற விலங்குகள் நன்றாக இருக்கும். மற்ற விலங்குகள் நன்றாக இருந்தால் பறவைகள் அனைத்தும் நன்றாக இருக்கும். பறவைகள் நன்றாக இருந்தால் மழை பெய்யும். நன்றாக மழை பெய்தால் விவசாயம் நன்றாக இருக்கும்.

விவசாயம் இருந்தால் சாப்பாடு நமக்கு கிடைக்கும். சாப்பாடு இல்லாமல் நாம் உயிர் வாழ முடியாது. ஆகவே யானை நம்மை நன்றாக பார்த்துக் கொள்கிறது. நாம் அனைவரும் சேர்ந்து யானைகள் பாதுகாப்போம் என தெரிவித்தார்.யானையை பாதுகாப்போம் என அனைவரையும் உறுதி மொழியையும் எடுக்க வைத்துள்ளார். தற்போது அச்சிறுமி பேசிய காட்சிகள் அதிகமாக பகிரப்பட்டு வரவேற்பை பெற்று வருகிறது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...