108 அவசர ஊர்திக்கு வழி விடாத தனியார் பேருந்திற்கு அபராதம் விதித்த போக்குவரத்து காவலர்கள்

கோவை உக்கடத்தில் இருந்து சின்ன தடாகம் செல்லும் தனியார் பேருந்து தட எண்- 85 வாகனத்தின் உள்ளே அதிக சத்தத்துடன் சினிமா பாடல் ஒலிபரப்பப்பட்டு பேருந்து சென்று கொண்டிருந்தது.



ரயில் நிலையம் அடுத்து பேருந்து முன்னே சென்று கொண்டிருந்தபோது பின்னால் 108 அரசு ஆம்புலன்ஸ் சைரன் ஒலித்தபடியே வந்தது.

அதிக சத்தத்துடன் பாடல் பேருந்தின் உள்ளே ஒலித்துக் கொண்டிருந்ததால் வாகன ஓட்டுனர் சுகதேவ் இதுபற்றி தெரியாமல் அவசர ஊர்திக்கு வழி விடாமல் பேருந்தை இயக்கிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் ரயில் நிலையம் அருகில் பணியில் இருந்த போக்குவரத்து ஆய்வாளர் பெரியசாமி தனது இரு சக்கர வாகனத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பேருந்தை தடுத்து நிறுத்தி விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டியதற்காக 1000 ரூபாய் அபராதம் விதித்தார்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதே போல் சுங்கம் பகுதியில் தனியார் பேருந்து போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...