‌விண்ணப்பித்த இரு வாரத்தில் நகல் குடும்ப அட்டை - கோவை மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு

நகல் ரேஷன் கார்டு பெற, ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பவர்களுக்கு இருவாரத்தில் தபால் மூலம் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.


கோவை: விண்ணப்பித்த இரு வாரத்தில் நகல் குடும்ப அட்டை வீடு தேடி வரும் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களில், 10 ஆயிரம் ரேஷன் கார்டு நகல் அச்சிடப்பட்டு, விரைவு தபால் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளன. கார்டுதாரர்கள், www.tnpds.gov.in என்ற இணைய தளத்தில் நகல் குடும்ப அட்டை என்பதை தேர்ந்தெடுத்து, பதிவு செய்துள்ள மொபைல் போன் எண்ணை உள்ளீடு செய்தால், ஒருமுறை 'பாஸ்வேர்டு' அனுப்பப்படும்.

அதை பயன்படுத்தி, விண்ணப்பிக்கலாம். நகல் அட்டைக்கான கட்டணம் ரூ.20, அஞ்சல் வழி பெறுவதற்கு ரூ.25 என, 45 ரூபாய் கட்டணம் ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். பணம் செலுத்தியதற்கான ரசீதை பதிவிறக்கம் செய்து, ஒப்புகை பக்கம் மற்றும் பணபரிவர்த்தனை குறியீட்டு எண்ணை உள்ளீடு செய்து, விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

இரு வாரத்துக்குள் நகல் ரேஷன் கார்டு, விண்ணப்பதாரர் முகவரிக்கு விரைவு தபால் வாயிலாக அனுப்பப்படும்.ரேஷன் கார்டு தொலைந்து விட்டாலோ, சேதம் அடைந்திருந்தாலோ அல்லது முகவரி திருத்தம், குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் ஆகிய திருத்தங்கள் செய்தபின், நகல் கார்டு பெற விரும்பினால் விண்ணப்பிக்கலாம். நகல் கார்டு அச்சிட்டு வழங்க தனியார் நிறுவனத்துக்கோ, தனி நபருக்கோ எவ்வித அனுமதியும் அரசால் வழங்கப்படவில்லை என, ஆட்சியர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...