தாராபுரம் அருகே கடந்த பத்து ஆண்டுகளாக போலி மருத்துவராக சிகிச்சை அளித்து வந்த நபர் கைது செய்யப்பட்டு, மருத்துவமனைக்கு காவல்துறையினர் சீல் வைத்தனர்.
திருப்பூர்: தாராபுரம் அருகே போலி மருத்துவமனை நடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குண்டடம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தாசர்பட்டி பகுதியில் தாராபுரம் பொட்டிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் சுமார் 10 ஆண்டுகளாக DDS என்கின்ற பெயரில் மருத்துவமனை அமைத்து மருத்துவம் பார்த்து வந்தார்.
சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக தாசர்பட்டி, பொன்னாபுரம் , நாரணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு மருத்துவராக பணியாற்றி.
இந்நிலையில் இன்று தாராபுரம் அருகே உள்ள குண்டடம் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தாசர்பட்டி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது தங்கராஜ் மருத்துவம் படிக்காமல் அப்பகுதியில் மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது.

இந்நிலையில் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் மருத்துவமனை அமைத்து மருத்துவராக பணியாற்றி வருவதாக தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் குண்டடம் போலீசார் தங்கராஜை கைது செய்தனர்.

தங்கராஜ் பொதுமக்களுக்கு பயன்படுத்திய மாத்திரைகள் மற்றும் ஊசி உபகரணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலி மருத்துவமனைக்கு சீல் வைத்து போலிசார், அவர் பயன்படுத்திய மாத்திரைகள் மற்றும் மருந்துகளை அப்புறப்படுத்தனர்.

தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களில் மருத்துவ துறையினர் மேற்கொண்ட ஆய்வில் கைது செய்யப்படும் இரண்டாவது போலி மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் தாசர்பட்டி, பொன்னாபுரம் சுற்று வட்டார பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.