சீலக்காம்பட்டியில் பி.ஏ.பி பிரதான கால்வாய் உடைப்பு - சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரம்

பொள்ளாச்சி அருகே சீலக்காம்பட்டியில் பிரதான கால்வாயில் வலது கரையில் மண் அரிப்பால், காலை, 5:00 மணிக்கு உடைப்பு ஏற்பட்டு நீர் வீணாக வெளியேறி தென்னந்தோப்புக்குள் புகுந்தது.


கோவை: சில நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்ட அதே இடத்தில் வலது கரையில் உடைப்பு ஏற்பட்டு, நீர் விரயமாகியது. மண் அரிப்பா அல்லது நீர் திருட்டா? என அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறினர்.

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம், 94 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இந்நிலையில், பொள்ளாச்சி அருகே, சீலக்காம்பட்டியில் பிரதான கால்வாயில் 26.200 கி.மீ.,ல் வலது கரையில் மண் அரிப்பால், காலை, 5:00 மணிக்கு உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறி தென்னந்தோப்புக்குள் புகுந்தது.

இதுகுறித்து விவசாயிகள், நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததும், காலை, 7:00 மணிக்குதான் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறுவது நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, கால்வாயில் நீர் மட்டம் குறைந்தது. சம்பவ இடத்துக்கு வந்த திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம், பி.ஏ.பி, தலைமை பொறியாளர் சிவலிங்கம் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள், பகிர்மான குழு மற்றும் பாசன சபை தலைவர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, உடைப்பு ஏற்பட்ட கரையில் மண் கொட்டப்பட்டு தண்ணீர் வெளியேறாமல் தடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சீரமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

விவசாயிகள் கூறுகையில், வறட்சியான கால கட்டத்தில் ஒரு சுற்று தண்ணீர் வழங்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் 26.200 கி.மீ.,ல் இடது கரையில் கசிவு ஏற்பட்டு சீரமைக்கப்பட்டது.

தற்போது, அதே இடத்தில் வலது கரையில் உடைப்பு ஏற்பட்டு, நீர் விரயமாகியது. மண் அரிப்பா அல்லது நீர் திருட்டு முயற்சியால், கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறினர்.

திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் கூறியதாவது, பிரதான கால்வாய் மொத்தம், 124 கி.மீ., நீளம் உடையது. இப்பகுதியில் கால்வாய் வெட்டப்படாமல், மண் குவித்து உருவாக்கப்பட்டது. ஆறு மாதம் தண்ணீர் செல்லும்; ஆறு மாதம் நீர் செல்லாது.

இதனால், கால்வாய் கரையில் இயற்கை காரணங்களால் நீர் கசிந்து, உடைப்பு ஏற்பட்டு இருக்கலாம். தற்போது, மண் கொட்டப்பட்டு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

இருநாட்களுக்கு நீர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. நாளை (இன்று) கான்கிரீட் பணிகள் மேற்கொண்டு, நாளை மறுநாள் (நாளை) தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

20 லட்சம் கனஅடி நீர் வீண், பொள்ளாச்சி அருகே, பிரதான கால்வாயில் நேற்று காலை, வினாடிக்கு, 1,154 கனஅடி நீர் சென்று கொண்டு இருந்தது. இந்நிலையில், உடைப்பு ஏற்பட்டதையடுத்து நீர் நிறுத்தப்பட்டது. ஆனாலும், கால்வாயில் இருந்த நீர் வடிய, 10 மணி நேரத்துக்கு மேலானது. இதனால், விநாடிக்கு, 50 கனஅடி வீதம், மொத்தம், இரண்டு மில்லியன் கனஅடி நீர் (20 லட்சம் கனஅடி) வரை வீணாகியுள்ளது. பாசனத்துக்கு தண்ணீர் பற்றாக்குறையுள்ள நிலையில், தண்ணீர் வீணாகியுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...