தாராபுரத்தில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் - தேர்தல் ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகள் கலந்துரையாடல்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அஇஅதிமுக திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நாமகிரி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.


திருப்பூர்: கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தலில் தாராபுரம் தொகுதி அதிமுக கைவிட்டது. ஆனால் இனி தாராபுரம் தொகுதி அதிமுகவின் இரும்பு எஃகோட்டையாக இருக்க வேண்டும் என்று பூத் கமிட்டி கூட்டத்தில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள்பாசறை மகளிர் அணி நிர்வாகிகள் பேசினர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அஇஅதிமுக திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நாமகிரி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தாராபுரம் நகர செயலாளர் சி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சின்னப்பன் (என்கிற) பழனிச்சாமி முன்னிலை வகித்தார்.

இதில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள்பாசறை மகளிர் அணி நிர்வாகிகள் பேசுகையில்,வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலானாலும் சரி, அடுத்த சட்டமன்ற தேர்தலானாலும் சரி தாராபுரம் தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

தாராபுரம் சட்டமன்ற தொகுதி எப்போதும் அதிமுகவின் கோட்டை. கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கிய நலத்திட்டங்களை எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும்.

கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தலில் தாராபுரம் தொகுதி அதிமுக கைவிட்டது. ஆனால் இனி தாராபுரம் தொகுதி அதிமுகவின் இரும்பு எஃகோட்டையாக இருக்க வேண்டும்.



அதை கட்டமைக்க நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். அப்படி அமைக்கப்படும் அதிமுக இரும்பு எஃகோட்டையை இனிவரும் எந்த ஒரு கட்சியினரும் உடைக்க முடியாத அளவிற்கு பலமானதாக உருவாக்க வேண்டும். எனவே தொண்டர்கள் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் கரத்தை வலுப்படுத்தி அவரை மீண்டும் முதலமைச்சராக அமர்த்த அனைவரும் பாடுபடுவோம் என இவ்வாறு தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் நகர இலக்கிய அணி செயலாளர் கிளை செயலாளர் மாதவன்ஒருங்கிணைப்பில் மாவட்ட இணை செயலாளர் திருப்பூர் மாவட்ட ஊராட்சி மன்ற குழு தலைவர் சத்யபாமா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ரேவதி குமார், மாவட்ட மகளிரணி இணை செயலாளர் கௌரிசித்ரா முருகேசன், மாவட்ட பாசறை தலைவர் சிவசுகுந்தன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க பொருளாளர் பா.ரா அரசகுமாரன், நகர அம்மா பேரவை செயலாளர் ராமசாமி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் பங்க் மகேஷ், பிரதிநிதிகள் கோல்டன் ராஜ். உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...