அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி - கோவையில் வரும் 7ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி கோவையில் வரும் 7ம் தேதி நடைபெறும் என்றும், இந்தப்போட்டியில் பங்கேற்பவர்கள் 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.


கோவை: போட்டியில் பங்கேற்பவர்கள் தங்களது வயது சான்றிதழ், வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் ஆதார் சான்றிதழ்களை 6ம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்ட போட்டியானது வரும் 7ம் நடத்தப்பட உள்ள நிலையில் அதற்காக விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர், பொது மக்களிடையே உடன் தகுதி கலாச்சாரத்தை புதுப்பிக்கும் வண்ணம் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்ட போட்டியானது ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும் நிலையில் இந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் வருகின்ற 7ம் தேதி நடத்தப்படவுள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முன் துவங்கி எல்ஐசி அண்ணா சிலை வழியாக மீண்டும் நேரு விளையாட்டு அரங்கை வந்தடையுமாறு இந்த ஓட்ட போட்டியானது நடத்தப்பட உள்ளது.

இப்போட்டியில் 17 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு 8 கிலோமீட்டர், பெண்களுக்கு 5 கிலோமீட்டர், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கிலோமீட்டர் பெண்களுக்கு 5 கிலோமீட்டர் என போட்டி நடத்தப்பட உள்ளது.

இப்போட்டியில் பங்கேற்பவர்கள் தங்களது வயது சான்றிதழ், வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் ஆதார் சான்றிதழ்களை 6ம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டியில் முதல் பரிசாக 5000 ரூபாய், இரண்டாம்பரிசாக 3000 ரூபாய், மூன்றாம் பரிசாக 2000 ரூபாய், நான்கு முதல் பத்து இடங்களில் வருபவர்களுக்கு தலா 1000 ரூபாய் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...