கோவையில் வறட்சியின் காரணமாக கால்நடைகளுக்கு மானியவிலையில் தீவனம்- மாவட்ட ஆட்சியர்

கோவையில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தற்போது நிவாரணம் வழங்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி விவசாயிகளது கால்நடைகளும் வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவற்றிற்கு தமிழக அரசு மானிய விலையில் தீவனம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த காரமடை, அன்னூர், பொகலூர், பெரியநாயக்கன்பாளையம், சுல்தான்பேட்டை, வெங்கிட்டாபுரம், கிணத்துக்கடவு மற்றும் இராமநாதபுரம் ஆகிய பத்து கால்நடை மருத்துவ நிலையங்களில் உலர் தீவன கிடங்குகளை நிறுவியுள்ளது.

வறட்சி நிலை சீராகும் வரை ஒரு கால்நடைக்கு தினம் 3 கிலோ வீதம், அதிகபட்சம் 5 கால்நடைகளுக்கு ஒரு வாரத்திற்கு 105 கிலோ வரை விவசாயி ஒருவருக்கு உலர் தீவனம் மானிய விலையில் கிலோ ஒன்றுக்கு ரூ.2 வீதம் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, கால்நடை வளர்ப்போர் தங்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் உலர் தீவனக் கிடங்கு அமைந்துள்ள கால்நடை மருத்துவ நிலைய கால்நடை உதவி மருத்துவரை அணுகி பயனடையலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...