கோவை கிருஷ்ணா கல்லூரியில் ரோஜ்கர் மேளா நிகழ்ச்சி - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு

ரோஜ்கர் மேளா இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் பங்கேற்று புதிதாக பணியமர்த்தப்பட்ட சுமார் 51,000 பணியாளர்களுக்கு பணி நியமன கடிதங்களை வழங்கினார்.


கோவை: பி.எம்.எஸ் திட்டத்தில் 20,000 கோடி ரூபாய் மீனவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. படகிகள் மீனவர்களுக்கு 17,000 கோடிக்கு communication device கொடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் விஷயத்தில் மிகவும் பாதுகாப்பாக மத்திய அரசாங்கம் செயல்பட்டு வருவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.



நாடு முழுவதும் 46 இடங்களில் நடைபெறும் ரோஜ்கர் மேளா நிகழ்ச்சியின் ஒரு பகுதி கோவை கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது.



இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு அஞ்சல் துறை, வங்கி மற்றும் இந்திய உணவுக் கழகம் போன்ற துறைகளில் புதிதாக பணியமர்த்தப்பட்ட 158 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி விழா சிறப்புரை ஆற்றினார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், பிரதமர் ரோஜ்கர் மேளா அரசு வேலை என்பது ஒருவருக்கு கனவு எனவும் அரசு துறையில் வேலை. 2022 ஆக்ஸ்ட் மாதம் ஒரு வருடத்தில் 10 லட்சம் பேர் அரசு வேலை தருவதாக கூறினார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. 8-வது ரோஜ்கர் மேளாவில் 8 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை வழங்கியுள்ளது.

பா.ஜ.க தலைமையில் இருக்கும் இடங்களில் வேலை வாய்ப்பு வழங்கபட்டு வருகிறது. டிஜிட்டல் இந்தியாவில் ஆதார் இணைக்கபட்டு 3 லட்சம் கோடி ரூபாயில் Infra Struture மத்திய அரசாங்கம் கொடுத்துள்ளது. அது போல் வந்தே பாரத் ரயில் சேவை,சந்திராயன் போன்ற விஷயங்களில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 2047-ம் ஆண்டு பாரத தேசம் பெருமளவில் வளர்ச்சியில் இருக்கும் எனவும் 2014 முன்னாடி 500 கம்பெனிகள் இருந்தது.

தற்போது 1 லட்சம் கம்பெனிஸ் உள்ளது. அதில் 30 வயது கீழ் உள்ள இளைஞர்கள் சி.இ.ஓ வாக உள்ளனர். தொடர்ந்து மீனவர்கள் படகுகள் பிடிக்கபட்டு வருகிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் சார்பில் மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்டு வருகிறோம்.

2014-க்கு முன்பு மீனவர்கள் கொல்லப்பட்டார்கள். அதன் பிறகு கொல்லப்படவில்லை. மீனவர்களுக்காக புதிய அமைச்சகத்தை பிரதமர் மோடி உருவாகியுள்ளார். பி.எம்.எஸ் திட்டத்தில் 20,000 கோடி ரூபாய் மீனவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. படகிகள் மீனவர்களுக்கு 17,000 கோடிக்கு communication device கொடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் விஷயத்தில் மிகவும் பாதுகாப்பாக மத்திய அரசாங்கம் செயல்பட்டு வருவதாக கூறினார்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...