கோவை சிறையில் நடந்த கலவரத்திற்கு முழுக்க முழுக்க சிறை கண்காணிப்பாளர் தான் காரணம் - வழக்கறிஞர்கள் புகார்

கோவை மத்திய சிறையில் காவர்களுடன் ஏற்பட்ட மோதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கைதிகளை வழக்கறிஞர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து குறைகளை கேட்டறிந்தனர்.


கோவை: சிறைக் கலவரம் குறித்து கைதிகளிடம் கேட்கச் சென்ற போது காவலர்கள் சுற்றி நின்று கைதிகளை பேசிவிடாமல் தடுத்தாதாவும், கைதிகள்ளின் வயிற்றில் கண்ணாடிகள், பிளேடுகள் போன்றவற்றை இருப்பதாக புகார் தெரிவித்தனர்.

கோவை மத்திய சிறையில் கைதிகளுக்கும் காவலர்களுக்கு இடையே கடந்த வாரம் கலவரம் ஏற்பட்டது. கைதிகளும் காவலர்களும் மாறி மாறி தாக்கிக் கொண்டதில் கைதிகள் மற்றும் காவலர்கள் பலத்த காயம் அடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இது குறித்து சம்பந்தபட்ட வழக்கறிஞர்கள் நேரில் சென்று கைதிகளிடம் நலம் விசாரித்து குறைகளை கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வழக்கறிஞர்கள், சிறையில் நடந்த கலவரம் குறித்து கைதிகளிடம் கேட்கச் சென்ற போது காவலர்கள் சுற்றி நின்று கைதிகளை பேசிவிடாமல் தடுத்து வருகின்றனர்.

சிறையில் நடந்த கலவரம் குறித்து கைதிகள் வழக்கறிங்களிடம் கூறியதாக சில காவலர்கள் பெயரை தெரிவித்தார். சிவக்குமார், ராகுல், சடையன், ஷாஜகான் மற்றும் சில காவலர்கள் பெயரை கைதிகள் தெரிவித்ததாக வழக்கறிஞர் கூறினார்.

சிறையில் இருக்கும் கைதிகளை காவலர்கள் மனித உரிமை மீறி தாக்கி உள்ளதாகவும் அந்த 7 கைதிகளில் வயிற்றில் கண்ணாடிகள், பிளேடுகள் போன்றவற்றை உள்ளே இருப்பதாக வழக்கறிஞர் கூறினார்.

இந்த 7 கைதிகளை தனி சிறையில் அடைத்து வைத்து இரவு நேரங்களில் தூங்கவிடாமல் தண்ணீர் ஊற்றுவதாகவும் சரியான முறையில் உணவு மற்றும் மருத்துவம் பார்க்கவில்லை என காவலர்கள் மீது வழக்கறிஞர் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக சட்டப் போராட்டம் நடத்த இருப்பதாக வழக்கறிஞர் தெரிவித்தார். காவலர்கள் சிறையில் கைதிகளின் கை, கால்களை உடைத்து சாப்பிட முடியாத அளவிற்கு சித்திரவாதம் செய்து வருவதாக கூறினார்.

இதனால் கைதிகளுக்கு உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு தலையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சிறையில் நடந்த கலவரத்திற்கு முழுக்க முழுக்க சிறை கண்காணிப்பாளர் தான் காரணம். சிறையில் கைதிகளை சந்தித்து குறைகளை கேட்கச்சென்ற வழக்கறிஞர்களை ஷூவை கலட்ட கோரியும், சட்டையை கழட்ட கோரியும் சிறைக்காவலர்கள் வழக்கறிஞர்களை கைதி போல் நடத்தி வருவதாக குற்றம் சாட்டினர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...