உலகளவில் நடைபெற்ற ராம்ப் வாக் போட்டி - முதலிடம் பிடித்த தமிழ்நாட்டு சிறுவர்

உலகளவில் நடைபெற்ற சிறுவர்களுக்கான ராம்ப் வாக் போட்டியில் கோவையைச் சேர்ந்த சிறுவன் முகமது நிஷார் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.



கோவை: தாய்லாந்தில் உலக அளவிலான Junior Model Fashion Show மற்றும் ராம்ப் வாக் நிகழ்ச்சி நடைபெற்றது.



அதில் பங்கேற்று இந்திய அளவில் கோவையை சேர்ந்த 7 வயது சிறுவன் முகமது நிஷார் முதலிடம் பிடித்து அசத்தினார்.



வெற்றி பெற்று மீண்டும் கோவை திரும்பிய சிறுவன் முகமது நிஷாருக்கு ரயில்நிலையத்தில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.



உலகளவில் போட்டியில் பங்கேற்று இந்தியா அளவில் முதலிடம் பிடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளதாக சிறுவனை புகழ்ந்தனர்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சிறுவன் தாயார்,



தனது மகனுக்கு மாடலிங் துறையில் அதிகளவில் விருப்பம் இருப்பதனால் 2 ஆண்டுகளாக பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் இதற்காக தனது மகனை சிறப்பு வகுப்பிற்கு அனுப்பி பயிற்சி எடுத்தாக கூறினார்.

தாய்லாந்தில் நடைபெற்ற உலகளவிலான ராம்ப் வாக்கில் போட்டியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சிறுவர்,சிறுமிகள் பங்கேற்றனர். அதில் இந்தியா அளவில் முதல் பரிசு பெற்று வெற்றி பெற்றுள்ளார் எனவும் 'Title Winner Award' வெற்றி வெற்று இந்தியா பெருமை சேர்ந்துள்ளதாக தெரிவித்தார். ஏற்கனவே தேசிய அளவிலான ராம்ப் வாக் போட்டியில் முகமது நிஷார் இந்தியா அளவில் இரண்டாம் பரிசு பெற்றவர் என குறிப்பிடத்தக்கது.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...