குன்னூரில் கெட்டுப்போன கோழி இறைச்சி பறிமுதல் - உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி

குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வரக்கூடிய உணவகங்களில் கெட்டுப்போன மீன், கோழி இறைச்சிகளை உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


நீலகிரி: குன்னூர் நகராட்சி பகுதியில் இயங்கி வரும் உணவகங்கள், பாஸ்ட்புட் கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்வதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இந்த. தகவலின் படி நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி சுரேஷ் தலைமையிலான அதிகாரிகள் குன்னூரில் உள்ள பேருந்து நிலையம், மார்க்கெட் பகுதி, பெட்போர்டு ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல், பாஸ்ட்புட் கடை, ஷவர்மா கடைகளில் ஆய்வு நடத்தினர்.

இதில் கலப்பட தேயிலை தூள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் காலாவதியான உணவு பொருட்கள், கெட்டுப் போன மீன், கோழி இறைச்சி, தடை செய்யபட்ட பாலிதீன் பைகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடை உரிமையாளர்களுக்கு ரூ.2000 முதல் ரூ.5000 வரை அபராதம் விதித்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட காலாவதியான உணவு பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர்.

இச்சம்பவம் குன்னூர் மக்களிடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...