ஓலா மற்றும் உபர் உள்ளிட்டவற்றின் போட்டிகளை எதிர்கொள்ள மூவ்லி நிறுவனத்துடன் கைகோர்த்த உழைக்கும் கரங்கள்

கோவையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் உழைக்கும் கரங்கள் ஆட்டோ சேவை உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நலச் சங்கம் மூவ்லி நிறுவனத்துடன் இணைந்து மொபைல் செயலி சேவையினை உருவாக்கியுள்ளது.



செயலிகள் மூலம் இயக்கப்படும் டேக்சி உள்ளிட்ட ஆட்டோ சேவையினால் நாடுமுழுவதும் உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்கள் மிகப்பெரியளவில் பாதிக்கப்பட்டு போராட்டங்களில் ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது. தொடர்ந்து நடுத்தர ஆட்டோ ஓட்டுநர்கள் ஓலா, உபர் உள்ளிட்ட டேக்சி சேவையினை எதிர்த்தும், போட்டியிட்டும் வருகின்றனர். இதுபோன்ற பெரிய நிறுவனங்களின் போக்குவரத்து சேவையினால் உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் மிகப்பெரியளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. அவர்களால், தங்களது வாகனத்தின் வாடகை கூட செலுத்தமுடியாமல் திவாலாகின்றனர்.



இந்நிலையில், உழைக்கும் கரங்கள் ஆட்டோ சங்கமும், மூவ்லி நிறுவனமும் இணைந்து இந்தியாவில் முன்னோடியாக ஒரு டேக்சி சேவை செயலியினை அறிமுகம் செய்துள்ளனர். இந்த செயலியின் மூலம் மக்களின் சேவைக்கு கோவை மாவட்டத்தில் 375 டேக்சி, ஆட்டோ வாகனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 

இதற்காக, கூடுதல் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பமும், பயிற்சியினையும் மூவ்லி ஆதரவாக வழங்கவுள்ளது. இந்த கூட்டமைப்பின் முயற்சி சமுதாயத்திலும், சந்தை நிலவரத்திலும், டேக்சி ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்திலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என மூவ்லி நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து உழைக்கும் கரங்கள் தலைவர் பி.ராஜா கூறுகையில், இந்த செயலியினாது மிகப்பெரும் டேக்சி சேவை நிறுவனங்களால் பாதிக்கப்பட்டு வந்த உள்ளூர் ஓட்டுநர்களுக்கு ஒரு நிவாரனமாக அமைந்துள்ளது. எங்களுக்கென தனி அங்கீகாரம் கிடைத்ததைப் போல உணர்கிறோம். வாடிக்கையாளர்களிடமும், ஓட்டுநர்களிடமும் இம்முயற்சி நல்ல நட்புறவை ஏற்படுத்தும். இதன் மூலம் விரைவில் எங்களது வாழ்வாதாரம் உயரும் என நம்புகிறோம் என தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...